உலகம் முழுவது பல டேட்டிங் செயலிகள் மிகவும் பிரபலமாக உள்ளன. இந்தியாவிலும் டின்டெர், ஓகே கியூபிடு, ஹேப்பன் போன்ற டேட்டிங் செயலிகள் உள்ளன. இதில் பல இளைஞர்கள் தங்களுக்கான கணக்குகளை தொடங்கி உரையாடல் நடத்தில் பின்னர் நேரில் சந்தித்தும் வருகின்றனர். இந்த முறை இந்தியாவைவிட வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான ஒன்று. அப்படி ஒருவர் டேட்டிங் செயலி மூலம் ஒருவருக்கு அறிமுகமாகியுள்ளார். பின்னர் அவரை சந்திக்க முடிவு செய்துள்ளார். ஆனால் அவரை சந்திக்கும் முன்பு அவர் குறித்து அறிய கூகுள் தளத்தில் தேடியுள்ளார். அப்போது அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அது என்ன? யார் அவர்?

Continues below advertisement

 

பிரிட்டன் நாட்டில் மிகவும் பிரபலமான டிக்டாக் நட்சத்திரங்களில் ஒருவர் சையினாகே கார்ட்வெல். இவர் சமீபத்தில் டிக்டாக்கில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பெரியளவில் வைரலாகியுள்ளது. அதில் அவர் தெரிவித்திருந்த கருத்துகள் தான் அந்த வீடியோ வைரலாக முக்கிய காரணமாக அமைந்தது. அதன்படி, “நான் ஒரு பிரபலமான டேட்டிங் செயலியில் சில நாட்களுக்கு முன்பாக ஒரு நபருடன் பேசினேன். அவருடன் பேசியது எனக்கு பிடித்தது.

Continues below advertisement

அதன்பின்பு நாங்கள் இருவரும் சந்திக்க திட்டமிட்டோம். அப்போது எனக்கு ஒரு யோசனை வந்தது. அதாவது அவரை நேரில் சந்திப்பதற்கு முன்பு அவர் குறித்து நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக கூகுளில் அந்த நபர் தொடர்பாக தேடினேன். அந்த தேடலில் வந்த செய்த எனக்கு பெரிய அதிர்ச்சியை தந்தது. நான் சந்திக்க நினைத்த நபர் இதுவரை பலரை கடத்தி கொலை முயற்சி செய்தவர் என்று தெரியவந்தது.அதைத் தொடர்ந்து அவரை சந்திப்பதை நிறுத்திவிட்டேன். அத்துடன் அவரிடம் அதன்பின்பு டேட்டிங் செயலியில் பேசுவதை நிறுத்திவிட்டேன். இதுபோன்று நம்மில் பலர் ஒருவரின் பின்புலம் தெரியாமல் பேசி வருகிறோம். ஆகவே இனிமேலாவது இந்த விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். 

அவரின் இந்த டிக்டாக் பதிவிற்கு ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். அதில், “நானும் இதேபோன்று ஒரு நபரை டேட்டிங் செயலி மூலம் சந்திக்க நேரிட்டேன். அதன்பின்பு தான் அவர் ஒரு பாலியல் வன்கொடுமை செய்யும் நபர் என்பது தெரியவந்தது” எனத் தெரிவித்துள்ளார்.மற்றொரு நபர், இதற்காக தான் இந்த டேட்டிங் செயலிகளை நம்பாதீர்கள் என நான் பல முறை கூறிவருகிறேன் எனப் பதிவிட்டுள்ளார். 

மேலும் படிக்க: பெண்கள் தனியாக செல்லக்கூடாது என்பது பிற்போக்குத்தனமானது - ஆஃப்கனுக்கு அறிவுரை சொன்ன பாக்