சர்வதேச பாடகி மேதாவின் முகத்தில் பாம்பு கடித்த அதிர்ச்சி வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிருந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
விலங்குகள், பறவைகள், உயிரினங்களுடன் பழகுவது அவ்வளவு எளிதானது அல்ல. எப்போதும் அது ஒரே மாதிரியான மனநிலையை கொண்டிருக்கும் என்றும் சொல்ல முடியாது. பல இடங்களில் பழகியவர்களை போட்டுத்தள்ளும் நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன.
அவைகளுடன் பழகுவது இனிமையானதாக இருந்தாலும் சற்று கவனமுடன் இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இல்லையேல் கண் இமைக்கும் நேரத்தில் அவை நமக்கு வினையாக மாறக்கூடும்.
அந்தமாதிரிதான் இங்கு ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரபல சர்வதேச பாடகி மேதாவின் முகத்தில் பாம்பு கடித்த அதிர்ச்சி வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிருந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 'பிட்ச் டோன்ட் பி மேட்' பாடகியான மேதா, சமீபத்தில் ஒரு மியூசிக் வீடியோவை உருவாக்கியுள்ளார். அப்போது ஒரு பயங்கரமான நிகழ்வைச் சந்தித்தார். அவர் மீது படுத்திருந்த பாம்பு ஒன்று அவரது கன்னத்தில் கடித்தது. நல்லவேளையாக அந்த பாம்பிடம் விஷம் இல்லை.
21 வயதான பாடகி மேதா, தனது அனுபவத்தை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்காக இதுகுறித்த சம்பவத்தின் 5 வினாடி கிளிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து "உங்கள் அனைவருக்கும் வீடியோக்களை உருவாக்க நான் என்னென்ன செய்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.