இங்கிலாந்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டை கடனில் இருந்து மீட்க 2 லட்சம் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இங்கிலாந்தின் பொருளாதார நெருக்கடி


பிரிட்டன் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான இன்ஸ்டிடியூட் ஃபார் ஃபிஸ்க்கல் ஸ்டடீஸ் என்ற அமைப்பு, இங்கிலாந்தை கடனில் இருந்து மீட்க அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஒரு ஆய்வறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது. அதனை தொடர்ந்து இந்த வருடம் மட்டும் சுமார் ஒரு லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியகி உள்ளது. பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டுக்கு ஏற்படும் இடர்களை இந்த பகுப்பாய்வு உற்றுநோக்குகிறது. வரிக் கொடுப்பனவுகளிலிருந்து மட்டுமல்ல, அதிக செலவினங்களிலிருந்தும் அழுத்தம் வருகிறது, என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தி அதன்மூலம் கடனை சரிகட்டலாம் என்றும் நினைத்தால் அதிலும் சிக்கல் ஏற்படுவதாக குறிப்பிடுகிறது.



2 லட்சம் ஊழியர்களை நீக்க திட்டம்


சமீபத்தில் இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ், நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அந்த நாட்டில் 2 லட்சம் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அந்நாட்டி அரசு ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்: கதறி கதறி அழுத ஜி.பி.முத்து... விடிய விடிய பிக்பாஸ் வீட்டில் நடந்த பஞ்சாயத்து!


குறைந்த வருமானம்


செவிலியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பொதுத்துறை ஊழியர்கள், மோசமான ஊதியத்திற்காக வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அச்சுறுத்துகின்றனர். "கூடுதல் நிதி வருமானம் இல்லாமல் அதிக ஊதியம் வழங்குவது துறைசார் வரவு செலவுத் திட்டங்களில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அது வேறு இடங்களில் பெரும் பொருளாதார சரிவை ஏற்படுத்துகிறது," என்று குவார்டெங் கூறினார், "அதிக ஊதியம், வழங்காதது வேலைநிறுத்தங்களின் அலை மற்றும் ஆட்சேர்ப்பு ஆகியவை, தொடர்ந்து சவால்களை ஏற்படுத்தும்," என்றார்.



இங்கிலாந்து அரசின் திட்டம்


நாட்டின் அரசு ஊழியர்களை வேலை நீக்கம் செய்து அரசுக்கான செலவை குறைப்பதன் மூலம் இங்கிலாந்தை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு உதவியாக இருக்கும் என்று பிரதமர் லிஸ் டிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் 5 பில்லியன் பவுண்ட் சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அரசுக்கான செலவுகளை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய வாய்ப்புகள் உள்ளதாகவும் மற்ற ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எதுவும் இருக்காது என்றும் கூறப்படுகிறது. இந்த திட்டம் மூலம் பணவீக்கம் குறையும் வாய்ப்பு உள்ளது என்று கருதுகின்றனர். இதே போல அடுத்த ஆண்டிலும் பண வீக்கம் தொடர்ந்தால் மேலும் ஒரு லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் லிஸ் டிரஸ்சின் இந்த நடவடிக்கையால் அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.