விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் 6 நிகழ்ச்சி, தொடக்கத்திலேயே பரபரப்பை எட்டியள்ளது. அதற்கு காரணம், இந்த முறை சரியான போட்டியாளர்களை உள்ளே அனுப்பியது தான். ஜி.பி.முத்து போன்ற எளிய சாமானியர்களை உள்ளே அனுப்பியதால், அவர்களின் வெகுளித்தனம் வெகுஜனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. 


நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே ஜனனி ஆர்மி, நிவா ஆர்மி, ஜிபி முத்து ஆர்மி என பல ஆர்மிகள் தொடங்கிவிட்டன. போதாக்குறைக்கு, அவர்களுக்கான ப்ரமோஷன்களும் தனித்தனியாக ஆர்மிகள் ஆரம்பித்து விட்டன. பிக்பாஸ் அல்டிமேட் போலவே, இந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியும் 24 மணி நேரம் ஒளிபரப்பாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. 


இதனால், ஒரு மணி நேரத்தில் பார்க்கும் எடிட்டிங் காட்சிகளை விட, எந்த எடிட்டும் இல்லாமல் எந்நேரமும் ஒளிரப்பாகும் பிக்பாஸ் ஒளிபரப்பு, பலரையும் கவர்ந்துள்ளது. இதில், நேற்று ஜி.பிமுத்து-தனலட்சுமி இடையே மோதல் ஏற்பட்டது. ஒரே கிளப் உறுப்பினர்களாக உள்ள அவர்கள் இருவருக்கும், மரியாதையாக அழைக்க வேண்டும் என்கிற அடிப்படையில் தோன்றிய பிரச்னை, பின்னர் அதே பெரிய வாக்குவாதமாக மாறியது. 






இருவருமே டிக்டாக் பிரபலங்கள் என்பதால், நேருக்கு நேராக பிரச்னை வெடித்தது. ‛என் மகள் வயதில் இருக்கும் பெண்ணை நான் என்ன அக்கா என்றா அழைக்க வேண்டும்’ என கொந்தளித்தார் ஜி.பிமுத்து. கடும் கோபத்தில் படுக்கை அறையில் அமர்ந்திருந்த ஜி.பிமுத்துவை ரஜிதா உள்ளிட்ட பலரும் ஆறுதல் படுத்தினர். இவை அனைத்தையும் நள்ளிரவில் நடந்து கொண்டிருந்தது.


காரணம் அந்த அளவிற்கு பிரச்னை, வீட்டை இரண்டாக்கியிருந்தது. இதனால், யாரும் உறங்காமல் விவகாரத்தை தீர்க்கவும், அமைதியாக்கவும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். முன்னதாக, தனலட்சுமியுடன் நடந்த வாக்குவாதத்தில் ஜி.பி.முத்து மீது தனலட்சுமி சில குற்றச்சாட்டுகளை வைத்தார். இதனால் மனமுடைந்த அவர், டைனிங் ஏரியாவில் அமர்ந்திருந்த போது, கதறி அழுதார். 


இதைப்பார்த்த சகல போட்டியாளர்கள், அவரை தேற்ற முயன்றனர். அப்போது, ‛நான் அப்படியா செய்தேன்...’ என்று கதறி அழுதார். உடனே அங்கு இருந்தவர்கள், ‛அப்படி நீங்கள் செய்யவில்லை... நடந்த எல்லாவற்றையும் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கவலைப்பட வேண்டாம்... நீங்கள் அழுவதை பார்த்தால், உங்கள் குழந்தைகள் கவலை கொள்வார்கள்’ என்று ஜி.பி.முத்துவை தேற்றினர். 






கடந்த சில நாட்களாக வீட்டை குதூகலத்தில் வைத்திருந்த ஜிபி முத்து, திடீரென கதறி அழுதது, பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் அனைவரையம் கவலை கொள்ளச் செய்தது. ‛ஜிபி முத்துவை பார்த்தாலே கடுப்பு ஆவதாக ’ பிக்பாஸ் கேமரா முன் ஏற்கனவே தனலட்சுமி பேசியதற்கு, ‛நீங்கள் நாமினேஷனுக்கு வாங்க... அப்போ இருக்கு உங்களுக்கு’ என, ஜிபி முத்து ஆர்மி சமூக வலைதளத்தில் ஸ்டேட்டஸ் போட்டு வரும் நிலையில், தற்போது இந்த விவகாரம் இன்னும் சூடு பிடிக்கும் என்றே தெரிகிறது.