” நீ என்ன டாக்டருக்கு படிச்சிருக்கியா? “ நாமலே நம் உடல்நல குறைவுக்கு மருத்துவம் பாக்கிறப்போ இந்த கேள்விகள எதிர்கொண்டிருப்போம். லேசான காய்ச்சல், ஜலதோஷத்திற்கே இந்த கேள்வி எழும். ஆனால், பிரிட்டனில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் தன் பல்லை தானே நீக்கியிருக்கிறார். பல் மருத்துவர் யாரிடமும் அப்பாயிண்மெண்ட் கிடைக்காததால் இப்படி செய்திருப்பதாய் கூறியிருக்கிறார். இந்த விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டேவிட் செர்கண்ட்( David Sergeant) என்பவர் பிரிட்டிஷ் தேசிய சுகாதார மையத்தில் ( British National Health Service) தனக்கு அப்பாயிண்மெண்ட் கிடைக்காததால் தன் பல்லை தானே நீக்கிக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக வேல்ஸ் ஆன்லைன் என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளவற்றை காணலாம்.
டேவிட்டிற்கு வெகு நாட்களாக பல் வலி இருந்துள்ளது. மருத்துவரை காண அணுகியுள்ளார். ஆனால், அவருக்கு மருத்துவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிக முறை இப்படி நிகழ்ந்ததால் அவருக்கு அதிருப்தி உணர்வு எற்பட்டுள்ளது. ஒரு பக்கம், பல் வலி, மற்றொரு புறம் மருத்துவரிடம் அனுமதி கிடைக்காததால் வருத்தம். இரண்டும் அவரை தானே பல்லை நீக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.
தன் பல்லை எப்படி நீக்கினார் என்பது குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார். பல்லை நீக்குவதற்கு முன்னமே, தான் பீர் அருந்தியதாகவும், வலி நிவாரண மாத்திரைகள் உட்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு தொந்தரவாக இருந்த பல்லை அகற்ற அந்தப் பல் நன்றாக ஆடும்வரை காத்திருந்துள்ளார். பின்னர், அதை அப்படியே கைகளால் நீக்கியுள்ளார். மேலும், சில சமயங்களில் குறடை பயன்படுத்தியுள்ளதாகவும் டேவிட் தெரிவித்துள்ளார்.
பல்லை நீக்கிய மறுநாள் காலை ரத்தமாக இருந்தது என்றும், வலி அதிகமாக இருந்ததாகவும் டேவிட் கூறியுள்ளார்.
இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், 15 ஆண்டுகளில் தன்னுடய பல்லை தானே நீக்கிக் கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பதுதான். மேலும், இவர் மனநலன் சார்ந்த பிரச்சினைகளுக்கும் உள்ளாகியதால், இவருக்கு மருத்துவரிடம் அனுமதி கிடைக்காததால் மிகவும் மன வேதனையடைந்துள்ளார்.
இது தொடர்பாக பிரிட்டிஷ் தேசிய சுகாதார நிலையம் அளித்திருக்கும் பதிலில், இந்த சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. யாருக்காவது பல் ஆரோக்கியம் குறித்து உதவி தேவைப்பாட்டால் எங்களை அணுகலாம். குறிப்பிட்ட அளவிலான பேஷண்ட்களின் அனுமதிப்பை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க..
Arumugasamy Commission Report: ஜெயலலிதா மரணம் : சசிகலா உட்பட நான்கு பேர் மீது விசாரணைக்கு பரிந்துரை