Monday: வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையை மிக மோசமான நாளாக அறிவித்து கின்னஸ் உலக சாதனை அமைப்பு நேற்று ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.


பொதுவாக நம் அன்றாட வாழ்க்கையில் வாரத்தின் முதல் நாளான திங்கிழமை என்றாலை பலருக்கு அலர்ஜியாக இருக்கிறது. சிலருக்கு பள்ளியில் கொடுக்கப்பட்டிருக்கும் வீட்டு தேர்வை கேட்பார்கள் என்ற பயம், பள்ளியில் நடைபெறும் தேர்வு பயம், கல்லூரிகளுக்கு இது பொருந்தும். அலுவலகங்களில் திங்கட்கிழமை அன்று தொடங்கும் அதிக வேலை பளு போன்ற சில விஷயங்களை திங்கட்கிழமை பலருக்கும் சரியானதாக இருக்காது. இதில் முக்கியமாக குழந்தைகள் திங்கட்கிழமை பள்ளிக்கு செல்லும் போது அழுது கொண்டு தான் செல்கின்றனர். பலர் சில காரணங்களை வைத்து திங்கட்கிழமை பள்ளிக்கு செல்வதை தவிர்க்கின்றனர். மேலும் அலுவலக ஊழியர்கள் சில காரணங்களை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து அந்த நாளில் அலுவலகம் செல்ல தவிர்க்கின்றனர். இந்த நாளான பலருக்கு பெரும் அலர்ஜியாகவே உள்ளது.


வாரத்தின் முதல் நாளில் காலையில் எழுந்து அலுவலகம், பள்ளி, கல்லூரி என்று பரபரப்பாக செல்வது என்பது கடினமான ஒன்று. முந்தைய நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வீட்டில் குடும்பங்களுடன் சந்தோஷமாக இருந்த நல்ல ஓய்வெடுத்தபின், அடுத்த நாளை பரபரப்பாக செல்வது அனைவருக்கும் கடினமானதாக இருக்கும். இதனால் பலரும் மனஉளைச்சலுக்கு ஆளுக நேடுகிறது என்று மருத்துவர்களால் கூறப்படுகிறது. இதனையெல்லாம் கருத்தில் கொண்டு கின்னஸ் உலக சாதனை திங்கட்கிழமையை மிக மோசமான நாளாக நேற்று அறிவித்துள்ளது.


இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையை வாரத்தின் மிக மோசமான நாளாக Guinness World Records அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டரில் அறிவித்துள்ளது.






இந்த ட்வீட் பலரை கவர்ந்துள்ளது. Guinness World Records வெளியிட்ட ட்வீட்-க்கு பலர் கருத்துகளை likes-யும் குவித்து வருகின்றனர். இதில் சிலர் கூறியிருப்பதாவது திங்கட்கிழமை நாளை 'Ugh' என்று மறுபெயரிட வேண்டும் எனவும் மேலும் சிலர் அந்த நாளை வார இறுதி நாளாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொடுள்ளனர். Guinness World Records வெளியிட்ட ட்வீட்டுக்கு பலர் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Also read: Roger Binny : 83 உலகக்கோப்பை நாயகன்.. பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி நியமனம்..!