சமூக வலைதளங்களில் கின்னஸ் சாதனை தொடர்பான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஒரு சாதனை வீடியோ வைரலாகி உள்ளது. அதிலும் குறிப்பாக அது கொரோனா பெருஞ்தொற்று காலத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது. கொரோனா காலத்தை பயன்படுத்தியும் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளது தான் இதன் சிறப்பம்சமாக உள்ளது. 


 


இந்தச் சாதனை தொடர்பாக கின்னஸ் சாதனை அமைப்பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில் பிரிட்டனை சேர்ந்த ஜார்ஜ் பீல் என்ற நபர் கின்னஸ் சாதனை ஒன்றை படைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் அவர் 7.35 விநாடிகளுக்குள் 10 முகக்கவசங்களை அணிந்து கொள்ளும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மிகவும் குறைவான விநாடிகளில் 10 முகக்கவசங்களை அவர் அணிந்துள்ளதாக கின்னஸ் சாதனை அமைப்பு அவருக்கு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. 


 






இந்த வீடியோவை தற்போது வரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து வியந்துள்ளனர். கொரோனா பெருஞ்தொற்று காலத்தில் ஒரு முகக்கவசம் அணியே மக்கள் தயங்கி வரும் சூழலில் இவர் முகக்கவசம் வைத்து சாதனை படைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவருடைய சாதனையை பார்த்த பிறகாவது அனைவரும் ஒரு முகக்கவசத்தையாவது அணிய வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண



மேலும் படிக்க: அந்த 85 நிமிடங்கள்: அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் கமலா ஹாரிஸ்..