Vegan கோழியை தயாரிக்கிறது Nestle நிறுவனம்.. எப்படித் தெரியுமா?

மனிதர்கள் உண்ணும் மாமிச உணவுகளை குறைக்க, அதற்கு மாற்றாக போலி கோழிக்கறி உற்பத்தியை முன்னெடுக்க நெஸ்லே நிறுவனம் முன்வந்துள்ளது.

Continues below advertisement

மனிதர்கள் உண்ணும் மாமிச உணவுகளை குறைக்க, அதற்கு மாற்றாக போலி கோழிக்கறி உற்பத்தியை முன்னெடுக்க நெஸ்லே நிறுவனம் முன்வந்துள்ளது.

Continues below advertisement

இந்த முன்னெடுப்புக்காக அதனை தயார் செய்யும் சுன்டியெல் (Sundial Foods)நிறுவனத்திற்கு நெஸ்லே நிறுவனம் 4 மில்லியன் டாலர்களை கொடுக்க முன் வந்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின்  CEO  ஜெசிகா ஸ்வாபாக் ( Jessica Schwabach) கூறும் போது, “ இந்த நிதியுதவி ஆரம்ப கால உற்பத்திக்கு உதவும். முதற்கட்டமாக சைவ கோழி இறக்கைகளை சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதிகளில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த வருடத்திற்குள் இதனை கலிபோர்னியாவின் பிற பகுதிகளில் விரிவுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.” என்றார். 


 

சுன்டியெல் நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர்களான ஜெசிகா ஸ்வாபாக் மற்றும் சிவென் டெங் நெஸ்லே நிறுவனத்தில் கடந்த ஓராண்டாக இருந்து இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். 

இது குறித்து ஜெசிகா ஸ்வாபாக் கூறும் போது, “ மக்கள் யதார்த்த  தோற்றத்தில் உள்ள அதிக புரத சத்து மிக்க உணவுகளை விரும்பினர். ஆனால் இதில் பெரும்பான்மையானோரின் விருப்பமாக தாவர உணவுப் பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட தோல் இருந்தது.

இறைச்சி கடைக்கு பதிலாக, நாங்கள் தாவர அடிப்படையிலான உணவுப் பொருட்களை கொடுக்க நினைக்கிறோம். இந்த முன்னெடுப்பு வாடிக்கையாளரை வலுக்கட்டாயாமாக தாவர உணவிற்கு தள்ளாமல் இயல்பாகவே அவர்களை தாவர உணவுகளை உண்ண வைக்கிறது. ” என்றார். 

சுன்டியெல் கொண்டைக்கடலையை அடிப்படை உணவாக கொண்டுள்ளது. இதனுடன் 8 பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவர்கள் உருவாக்கும் கோழி இறக்கையில் 100 க்கு 27 கிராம் புரதம் உள்ளது. இந்த புரத லிப்பிட் படலத்தால் ஆனது. இது ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது. எலும்புகள் மூங்கில் தண்டுகளிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளன. 

மேலும் படிக்க:

Continues below advertisement
Sponsored Links by Taboola