Uber Layoff : உபெர் நிறுவனத்திற்கு தேவையான ஊழியர்களை நியமிக்கும் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களை பணீநிக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.


பணி நீக்கம்:


உலக நாடுகளில் எதிர்வரும் பொருளாதார மந்த நிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக பொருளாதார ஆய்வறிஞர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பெருநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. 


சமீபத்தில், 12 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாக கூகுள் அறிவித்தது. பணி நீக்கத்தை பொறுத்தவரையில், அமேசான் நிறுவனமும் பல்வேறு கட்டமாக மேற்கொண்டு வருகிறது. சுமார் 2 ஆயிரத்து 300 பணியாளர்களை வேலை யை விட்டு நீக்குவதாக அறிவித்திருந்தது. இதேபோன்று, ஸ்பாட்டிஃபை, பைஜூஸ், ஷாப்பி மற்றும் ஜூம் ஆகிய பெருநிறுவனங்களும், பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டன. அந்த வரிசிசையில் தற்போது உபெர் நிறுவனம் வந்துள்ளது. 


உபெர்


உலகளவில் உபெர் நிறுவனத்தில் மொத்தமாக 32,700 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்நிறுவனம் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் சரக்கு சேவை பிரிவில் பணியாற்றய 150 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி உள்ளது உபெர்.


அதேபோன்று, தற்போது மேலும் 200 பேரை பணியில்  இருந்து நீக்கப்போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது உபெர் நிறுவனத்திற்கு தேவையான ஊழியர்களை நியமிக்கும் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களை நீக்க உள்ளது. 


காரணம் 


உபெர் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு சமீப காலமாகவே குறைந்த வண்ணமே உள்ளது. இதனால் நிறுவனத்தின் செலவை குறைக்கவும், ஊழியர்களின் எண்ணிக்கையை சமமாக வைத்திருக்கவும் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இனிவரும் காலங்களில் நிறுவனத்தின் லாபத்தை உயர்த்தும் விதமாக பல நடவடிக்கைகளை உபெர் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேம், இனி வரும் காலத்தில் 26 சதவீதம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


அண்மையில் வெளியான அறிவிப்பு


பைஜூஸ் நிறுவனத்தின் பல்வேறு துறை ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, நாடு முழுவதும் உள்ள 280 சென்டர்களில் இருந்து விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் 1,000 பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


RN Ravi: மீண்டுமா..! ” பட்டதாரிகளிடையே திறமை இல்லை “ - ஆளுநர் ரவி பேச்சால் வெடித்த சர்ச்சை


Thangam Thennarasu: வள்ளலார் குறித்த ஆளுநர் கருத்து.. அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..