மேற்கு ஆப்கான்ஸ்தானில் நேற்று 6.3 என்ற சக்திவாய்ந்த அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பேரிடர் நிவாரண அதிகாரிகள் நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்டபோது அதிர்ச்சிகர செய்தி ஒன்றை வெளியிட்டனர். அதில், “ நிலநடுக்கத்தில் இதுவரை சுமார் 1000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும், 1,000 க்கும் மேற்பட்டோர் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவித்தனர்.
நிலநடுக்கம் தொடர்பாக செய்தி நிறுவனமான பிரான்ஸ்-பிரஸ்ஸே (AFP) தெரிவிக்கையில், “ ஹெராட்டின் வடமேற்கே 40 கிலோமீட்டர் (24.8 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.” என குறிப்பிட்டு இருந்தது.
தொடர்ந்து, ஹெராத் மாகாணத்தின் பேரிடர் மேலாண்மைத் தலைவர் மோசா அஷாரி, “ இதுவரை, காயமடைந்த 1,000க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதான குடிமக்களை மீட்டு சிகிச்சையில் அனுமதித்துள்ளோம். மேலும், சுமார் 1000பேர் உயிரிழந்துள்ளனர்.” என்று தெரிவித்தார்.
6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்களை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது. USGS இணையதளம் இப்பகுதியில் ஏழு நிலநடுக்கங்களை உணர்ந்ததாக தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர் ஒருவர் தெரிவிக்கையில், “மதிய உணவு நேரத்தில் குறைந்தது ஐந்து கடுமையான நிலநடுக்கங்கள் நகரத்தை தாக்கியது. அனைத்து மக்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். வீடுகள், அலுவலகங்கள், கடைகள் அனைத்தும் காலியாக உள்ளதால் மேலும் நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. நானும் எனது குடும்பத்தினரும் எங்கள் வீட்டிற்குள் இருந்தோம், நிலநடுக்கத்தை உணர்ந்தேன்” என்று தெரிவித்தார்.
தொலைபேசி இணைப்புகள் கீழே விழுந்ததால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தகவல்களைப் பெறுவது கடினமாக உள்ளது என்றும், நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு வெளியே தெருக்களில் காணப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர். ஹெராத் மாகாணம் ஈரானுடன் எல்லையைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, அண்டை மாகாணங்களான ஃபரா மற்றும் பட்கிஸிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 2022 ம் ஜூன் மாதம் கிழக்கு ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் தாக்கியது. இது, கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கமாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 1,000 பேர் உயிரிழந்ததாகவும், 1,500 பேர் காயமடைந்திருந்தனர்.