பொதுவாக சிறுவர்கள் அல்லது பெரிய விளையாட்டு வீரர்கள் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு வித்தை செய்யும் வீடியோ நாம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதன் காரணமாக அதை பலரும் அவர்கள் உடம்பை வில்லாக வளைத்து செய்யும் காட்சிகளை மெய்மறந்து பார்ப்பார்கள். அதுவே இரண்டு கால்களும் இல்லாமல் ஒருவர் ஜிம்னாஸ்டிக் செய்தால் அதை நிச்சயம் பார்க்க அனைவருக்கும் ஆச்சரியம் அதிகரிக்கும். அப்படி ஒரு சிறுமியின் வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் ஒஹியா மாகாணத்தைச் சேர்ந்தவர் பெய்ஜ் காலெண்டைன். இவர் சிறுவயதில் தன்னுடையை இரண்டு கால்களையும் இழந்தவர். தன்னுடைய கால்களை இழந்தாலும் தனக்கு பிடித்த ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று வெறியுடன் இருந்துள்ளார். அதற்காக தீவிர பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். அந்தவகையில் 10 வயதாகும் அந்த சிறுமி தற்போது ஜிம்னாஸ்டிக் வித்தை செய்யும் காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு கால்களும் இல்லை என்றாலும் அவர் செய்யும் ஜிம்னாஸ்டிக் வித்தைகள் நம்மை வியக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த வீடியோவை ஒருவர் தன்னுடைய டவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதை 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தற்போது வரை பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் பலரும் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அதன்படி பலர் இந்த சிறுமி பலருக்கு நல்ல நம்பிக்கை விதைக்கும் வகையில் அமைந்துள்ளார் என்று சிலர் கருத்து கூறி வருகின்றனர். அதேசமயம் மற்ற சிலர் இவர் செய்வதை பார்க்கும் போது இவருக்கு இருக்கும் குறை அனைத்தும் நிறையாக தெரிகிறது என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: இரண்டு தலைகள்.. பன்றி உடல்..பிறழ்வு குறைபாட்டுடன் பிறந்த கன்றுக்குட்டி மரணம்.. சோகத்தில் குடும்பம்..