காதலர் தினத்திற்கு முன்னதாக தம்பதிகள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும், மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக உடலுறவு கொள்ளவும் தாய்லாந்தின் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


இனப்பெருக்க சுகாதார பணியக இயக்குனர் புன்யாரிட் சுக்ரத் கூறுகையில், "நெருக்கமான சுவாசம் மற்றும் உமிழ்நீரை பரிமாறிக்கொள்வதன் மூலம் கொரோனா பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன” என்று கூறினார்.


இந்த காதலர் தினத்தில் தாய்லாந்தில் உள்ள காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை பறிமாறி கொள்வதற்கு தயாராகி வரும் நிலையில், உடலுறவின்போது மாஸ்க் அணிவது உட்பட, பாதுகாப்பான தொற்றுநோய் உடலுறவை மேற்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் தம்பதிகளை வலியுறுத்துகின்றனர்.




மேலும் படிக்க: Wordle | குளியலறையில் 17 மணிநேரம்.. மூதாட்டியின் உயிரைக் காப்பாற்றிய Wordle விளையாட்டு!




தென்கிழக்கு ஆசிய சுற்றுலா மையத்தில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மாத தொடக்கத்தில் சுமார் 8,000 இலிருந்து கடந்த பதினைந்து நாட்களில் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது. பிப்ரவரி 14 ஆம் தேதி இது அதிகரிக்கலாம் என்று சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். அதே நேரத்தில் மக்கள் மற்ற நாட்களிலும் உடலுறவு கொள்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.




"கொரோனா என்பது பாலியல் ரீதியாக பரவும் நோய் அல்ல. ஆனால் நெருங்கிய தொடர்பு சுவாசம் மற்றும் உமிழ்நீரை பரிமாறிக்கொள்வதன் மூலம் கொரோனா பரவுவது சாத்தியமாகும். தம்பதிகள் தங்கள் துணைக்கு வைரஸ் பரவுவதைத் தடுக்க, இரவு நேரத்துக்கு முன் ஆன்டிஜென் சோதனைகளைச் செய்ய பரிந்துரைக்கிறேன். காதலர்கள் நேருக்கு நேர் பாலுறவு மற்றும் ஆழமாக முத்தமிடுவதைத் தவிர்க்கவும்  மற்றும் தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்க விரும்பினால் கருத்தடைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முடிந்தால், உடலுறவு கொள்ளும்போது மாஸ்கை அணிவது கொரோனா அபாயங்களைக் குறைக்க உதவும் " என்று சுகாதார பணியக இயக்குனர் புன்யாரிட் சுக்ரத் கூறினார்.


தாய்லாந்தில் காதலர் தினத்தில், காதலர்கள் திருமணம் செய்வதற்கு ஒரு நல்ல நாளாக கருதப்படுகிறது. திருமணப் பதிவு அலுவலகங்களில் பெரும்பாலும் நீண்ட வரிசைகள் உள்ளன. குறிப்பாக பேங் ராக்கின் பாங்காக் மாவட்டத்தில், இது தாய் மொழியில் "காதல் மாகாணம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.




மேலும் படிக்க: செக்ஸ் பொம்மையால் மண்டைக்குடைச்சலில் போலீசார்! சடலமென நினைத்து டைம் வேஸ்ட் செய்த கொடுமை..




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண