மலேசியாவின்  ஷா ஆலம் பகுதியில் உள்ள பைக் கடையின் பின்புறம் ஒரு குப்பைத் தொட்டி ஒன்று உள்ளது. வழக்கமாக அங்கு குப்பை போட வந்த ஒருவர் பெண் சடலம் ஒன்று பிளாஸ்டிக் பையில் சுத்தப்பட்டு கிடப்பத்தை பார்த்து ஷாக் ஆகியுள்ளார். உடனடியாக இது குறித்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. குப்பைத் தொட்டியில் நிர்வாணமாக பெண் சடலமா என அங்கு மக்களும் கூடிவிட்டனர்.போலீசார் வரும்வரை எதையுமே செய்வதற்கில்லை என ஊரே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்துள்ளது. 


அதிவேகமாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அருகே சென்று பெண் சடலத்தை சுற்றி இருந்த பாலிதீன் கவரை அகற்றினர். அகற்றிய போலீசாருக்கு ஷாக் ஆகியுள்ளனர். என்னடா இது என்பது போல விரக்தி அடைந்துவிட்டனர் அந்த போலீஸ். ஏதோ பெண் உருவம், பெரிய கிரைம் என நினைத்து பாலீத்தீனை கிழித்துப் பார்த்தால் உள்ளே பெண் உருவ செக்ஸ் பொம்மை இருந்துள்ளது. மெழுகால் செய்யப்பட்ட பெண் செக்ஸ் பொம்மை பார்ப்பதற்கு அச்சுஅசலாக பெண் போலவே இருந்ததால்தான் அனைவருமே குழம்பியுள்ளனர். 


இது குறித்து தெரிவித்த போலீசார், '' பெண் சடலம் என தகவல் வந்ததுமே சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்களுடன் சென்றோம். அவர்கள் பாலித்தீன் தாளை அகற்றி பார்த்தபோதுதான் அது செக்ஸ் டால் என தெரியவந்தது. பட்டப்பகலில் யார் இந்த பொம்மையை இங்கே தூக்கி வீசிச் சென்றார்கள் எனத் தெரியவில்லை. அது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.






 


இங்கிலாந்திலும் செக்ஸ் பொம்மை...


மலேசியா சம்பவத்தைப் போலவே இங்கிலாந்திலும் ஒரு சம்பவம் நடந்தது. தண்ணீரில் மிதந்த செக்ஸ் பொம்மையை பெண் என நினைத்து கடலுக்குள் குதித்து காப்பாற்றச் சென்றார் ஒருவர். பின்னர் அது செக்ஸ் பொம்மை எனத் தெரிந்ததும் நீந்தி கரைக்கு வந்துள்ளார்.  இது குறித்து பேசிய அவர், ''


இந்த சம்பவம் தொடர்பாக அந்த முதியவர் கிறிஸ் ஃபோர்ட் கூறுகையில், “நான் கடற்கரைக்கு சென்று நேரத்தை கழிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தேன். அந்தவகையில் அன்று நான் கடற்கரைக்கு சென்று இருந்தப் போது ஒரு பெண் உருவம் மிதந்து கிடப்பது போல் தோன்றியது. அதை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தேன். அந்த உருவத்தின் தலை மட்டும் எனக்கு தெரியவில்லை. ஆனால் அது உண்மையில் ஒரு பெண்ணை போல் இருந்தது. இதனால் அதைக் காப்பாற்ற நான் நினைத்தேன். 


தண்ணீரில் இறங்கி அந்த உருவத்திற்கு அருகே சென்று பார்த்தேன். அப்போது அது உண்மையில் பெண் இல்லை என்பது எனக்கு தெரியவந்துள்ளது. அது தலை இல்லாத ஒரு பெண் உருவ செக்ஸ் பொம்மை என்பது தான் அது. எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.