இங்கிலாந்து நாட்டின் நியூ காஸ்டில் பகுதியில் 79 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒருநாள் இரவு நேரத்தில் இவருடைய வீட்டிற்கு 16 வயது மதிக்கதக்க சிறுவன் ஒருவர் வந்துள்ளதாக தெரிகிறது. அவர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து இந்த மூதாட்டியிடன் தவறாக நடந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த மூதாட்டியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றுள்ளதாக தெரிகிறது. 


இதைத் தொடர்ந்து அந்த மூதாட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், “என்னுடைய வீட்டிற்கு வந்த அந்த சிறுவன் முதலில் கதவை தட்டி கொண்டிருந்தான். அவனுடைய உருவம் பார்ப்பதற்கு என்னுடைய மகனை போல் இருந்தது. அதனால் நான் கதவை திறந்தேன். அப்போது அவன் வேகமாக வீட்டிற்குள் நுழைந்து என்னை தள்ளி விட்டான். என்னிடம் பணம் இருக்கிறதா என்று கேட்டு முதலில் கடினமாக நடந்து கொண்டான். பணம் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் என்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயற்சி செய்தான். நான் அதிகமாக அலறவதை பார்த்து அவன் என்னை கீழே தள்ளிவிட்டு வெளியே ஓடினான்” எனக் கூறியுள்ளார். 




ஐபிஎல் வீரர்கள் ஏலம் தொடர்பான உடனுக்குடன் தகவல்களுக்கு இங்கு க்ளிக் செய்யவும்




அந்த மூதாட்டி அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்பின்னர் அந்த வீட்டில் இருந்து கிடைத்த மரபணுக்களை வைத்து பரிசோதனை செய்துள்ளனர். அந்த மரபணு விவரத்தை காவல்துறையினர் 16 வயது சிறுவன் ஒருவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


அதன்படி அந்த சிறுவன் தன்னுடைய 11 வயது முதல் தொடர்ந்து குற்றச்சம்பங்களில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு மாற்றுத்திறனாளி பெண் ஒருவரிடம் கத்தியை காட்டி இவர் வழிபறியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே 11 வயதாக இருந்தப் போது அந்தச் சிறுவன் ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததற்காக கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த சிறுவன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது இவருடைய தொடர் குற்றச் செயல்களை பார்த்து நீதிபதிகள் 8 அரை ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளனர். சிறுவன் ஒருவர்  தனியாக இருந்த மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: குளியலறையில் 17 மணிநேரம்.. மூதாட்டியின் உயிரைக் காப்பாற்றிய Wordle விளையாட்டு!