தொடர் கஞ்சாவால் மன அளவில் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தன்னுடைய ஆணுறுப்பை கத்திரிக்கோலால் வெட்டிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது


போதைக்காக பயன்படுத்தப்படும் கஞ்சா நாளடைவில் மன அளவில் பாதிப்பை உண்டாக்குகிறது. ஒருகட்டத்தில் கஞ்சா போதைக்கு அடிமையாகும் நபர்கள் மன அளவிலும், உடல் அளவிலும் பெரிய பாதிப்பை சந்திக்கின்றனர். பார்வை குறைபாடு, பேச்சு குளறுதல், நரம்பு பிரச்னை, மூச்சு பிரச்னை போன்ற உடல் பாதிப்புகளும், மாயத் தோற்றங்கள் தோன்றுவது போன்ற மன அளவிலான பெரிய பாதிப்பையும் உண்டாக்குகிறது. அப்படி கஞ்சா போதையால் மன அளவில் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தன்னுடைய ஆணுறுப்பை கத்திரிக்கோலால் வெட்டிக்கொண்ட சம்பவம் தாய்லாந்தில் அரங்கேறியுள்ளது




தாய்லாந்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் தொடர்ந்து கஞ்சா புகைத்து அதற்கு அடிமையாகியுள்ளார். ஒருக்கட்டத்தில் அவர் கஞ்சா புகைத்தாலே அவரது ஆணுறுப்பு விரைப்புத்தன்மையை அடைந்துள்ளது. எந்தவித பாலியல் எண்ணம் இல்லாமலேயே ஆணுறுப்பு விரைப்புத்தன்மை அடைவதும் அதனால் அதிகப்படியான வலியையும் அந்த இளைஞர் தொடர்ந்து அனுபவித்து வந்துள்ளார்.




Crime | ஆன்லைனில் ஆபாசப்படம்.. 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் செய்த கொடூரம்..




இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் ஆணுறுப்பின் மேல்தோலை வெட்ட முடிவு செய்துள்ளார். ஒருகட்டத்தில் மன அளவில் உளைச்சலுக்கு உள்ளான அவர் தன்னுடைய ஆணுறுப்பையே வெட்டியுள்ளார் அந்த இளைஞர். தொடர்ந்து ரத்தப்போக்கு இருந்ததால் உடனடியாக அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் சிகிச்சைக்கு பிறகு அந்த இளைஞர் தற்போது உயிர் பிழைத்துள்ளார்




இந்த சம்பவம் குறித்து குறிப்பிட்டுள்ள சியாங் மாய் யுனிவர்சிட்டியின் அவசர மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், பொதுவாக மன அளவில் பெரிய பாதிப்புகளை சந்திப்பவர்கள் தங்களைத்தானே துன்புறுத்திக் கொள்வார்கள். இப்படி ஆணுறுப்பை வெட்டிக்கொள்வதெல்லாம் மிகவும் அரிதானது. ஆனால் கஞ்சா போதையால் பாதிக்கப்பட்ட ஒருவர் இப்படி செய்துகொண்ட சம்பவம் ஆச்சரியமாக உள்ளது. கிட்டத்தட்ட கஞ்சா போதைக்கு அடிமையான அவர் சம்பவம் நடந்த காலக்கட்டத்தில் 2 மாதங்களாக கஞ்சா புகைப்பதை நிறுத்தியுள்ளார். ஆனால் ஏற்கெனவே கஞ்சாவால் பாதிக்கப்பட்ட மனநிலை அவரை இந்தநிலைக்கு தள்ளியுள்ளது என்றார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண