குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது 8 வயது சிறும் ஒருவரை 2 மாதங்களாக 7 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. 


சத்தீஸ்கர் மாநிலத்தில் அம்பிகாபூர் பகுதியில் ஒரு கூட்டுக் குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளது. அந்தக் குடும்பத்தில் ஒரு 8 வயது சிறுமி இருந்துள்ளார். அவரை கடந்த இரண்டு மாதங்களாக அதே குடும்பத்தைச் சேர்ந்த 6 சிறுவர்கள் உள்பட 7 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக அந்தச் சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார். இந்தச் சூழலில் ஒருநாள் அவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். அப்போது அவரை மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவ பரிசோதனையில் அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளது தெரியவந்துள்ளது. 


இதைத் தொடர்ந்து அந்தச் சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, அந்த வீட்டில் இருந்த 6 சிறுவர்கள் தினமும் ஆன்லைன் கல்வி கற்பதாக கூறி மொபைல் போனில் ஆபாச படத்தை பார்த்ததாக தெரிகிறது. அதில் பார்த்ததை செய்து பார்க்க அவர்கள் விரும்பி இந்த 8 வயது சிறுமியை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்பு இது கூட்டு பாலியல் வன்கொடுமையாக மாறியுள்ளது. இது தொடர்பாக அந்த குடும்பத்தினர் யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். 




அந்தக் குழந்தைகள் ஆன்லைன் கல்வி கற்று விளையாடி வருவதாக அவர்கள் நினைத்து கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் வெளியே வந்தப் பிறகு அந்த சிறுவர்கள் பயன்படுத்திய மொபைல்போனை அக்குடும்பத்தினர் வாங்கி பார்த்துள்ளனர். அப்போது அந்த மொபைல் போனில் பல ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 7 சிறுவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த 7 பேரும் 6 முதல் 13 வயது நிரம்பியவர்கள் என்பதால் அவர்களை குழந்தைகள் ஆணையம் முன்பாக ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து காவல்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 


மேலும் படிக்க: "அடிக்கடி RTI ல தகவலா கேட்குற" : அடி ஆட்கள் வைத்து மிளகாய் பொடி தூவி தாக்குதல்.. சிசிடிவியால் சிக்கிய விகேபுரம் தலையாரி