உலகம் முழுவதும் குழந்தை கடத்தல் சம்பவங்கள் பல்வேறு பாணியில் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு குழந்தை கடத்தல் முயற்சி சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஒருவர் வால்மார்ட் கடைக்கு வெளியே தாயுடன் இருந்த குழந்தையை அபகரிக்க முயன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 


அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் அமைந்துள்ள வால்மார்ட் கடைக்கு ரெபிக்கா டெய்லர் என்ற 49 வயது பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வந்துள்ளார். அப்போது அந்த கடையின் வாசலில் இளம் பெண் ஒருவர் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்துள்ளார். அவரிடம் டெய்லர் மெதுவாக பேச்சு கொடுக்க தொடங்கியுள்ளார். அதில் முதலாவதாக, “உங்களுடைய குழந்தையின் கண்கள் நன்றாக உள்ளது. இந்த குழந்தையை எனக்கு எவ்வளவு ரூபாய்க்கு தருகிறீர்கள்” எனக் கேட்டதாக கூறப்படுகிறது. 




அந்த குழந்தையின் தாய் இவர் விளையாட்டாக கேட்கிறார் என்று முதலில் நினைத்துள்ளார். ஆனால் தொடர்ந்து டெய்லர் அந்த இளம்பெண்ணிடம் குழந்தையை வாங்குவது தொடர்பாக பேசி வந்ததாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து கார் நிறுத்துமிடத்தில் சென்று 50000 டாலர்கள் தருகிறேன் இந்த குழந்தையை எனக்கு கொடுத்து விடுங்கள் என்று தகராறு செய்ததாக தெரிகிறது. அவரிடம் இருந்து அந்த பெண் ஒரு வழியாக தபித்து வீட்டிற்கு சென்றுள்ளார். 


மேலும் படிக்க: வடக்கு கென்யாவில் அரிதாக இரட்டை குட்டிகள் ஈன்ற யானை… இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி!


அதன்பின்னர் அந்த இளம்பெண் காவல்துறையினரிடம் இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பெயரில் டெய்லரின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் தான் எந்த ஒரு குற்றமும் செய்யவில்லை என்று டெய்லர் தொடர்ந்து கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த வால்மார்ட் கடையின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்துள்ளனர். அப்போது இவர் செய்த குற்றச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து காவல்துறையினர் ரெபிக்கா டெய்லரை கைது செய்துள்ளனர். மேலும் குழந்தையை கடத்த முயற்சித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வால்மார்ட் கடை அருகே பெண் ஒருவரின் குழந்தையை கடத்த முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: ஆர்டர் போட்டு விளையாடிய சிறுவன்.. எகிறிய பில்.. ஷாக்கான பெற்றோர்