நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சுமார் ஒன்பது மாதங்களாக விண்வெளியில் தங்கியிருக்கும் நிலையில், இறுதியாக பூமிக்குத் திரும்ப உள்ளனர். இந்நிலையில், அவர்களின் உடல்கள் தீவிர சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அவர்களது இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு பல நாட்கள் எடுக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சுனிதா வில்லியம்ஸ் அளித்த பதில்கள் குறித்தும், பூமி திரும்புவது எப்போது என்பது குறித்தும் பார்ப்போம்.

Continues below advertisement

சர்வதேச விண்வெளி நிலையம்:

சர்வதேச விண்வெளி நிலையமானது, பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் பூமியைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது. இது, சுமார் 90 நிமிடத்தில் பூமியை முழுவதுமாக சுற்றி வந்து விடும். அதாவது, ஒரு நாளில் சராசரியாக 16 முறை பூமியைச் சுற்றி வரும் என கூறப்படுகிறது. சில நேரங்களில், வானில் சிறு புள்ளி வெளிச்சம் போல் வானத்தில் செல்வதை,மக்கள் பலர் பார்த்துள்ளனர்.

Continues below advertisement

இந்த விண்வெளி நிலையத்தில், விண்வெளி வீரர்கள் தங்கி , விண்வெளி தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏவப்பட்ட ஸ்டார்லைனர் விண்கலமானது, விண்வெளி பயணங்களை  சோதனை செய்யும் வகையில் இரண்டு விண்வெளி வீரர்களான இந்திய வம்சாவளியைச் சேண்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றொரு வீரர் புட்ச் வில்மோர் ஆகியோரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்றது. ஆனால், விண்கலத்தில் எரிபொருள் கசிவு உள்ளிட்ட கோளாறு கண்டறியப்பட்டது

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் சிக்கல்:

ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் ஸ்டார்லைனரின் விண்கலத்தில் பயணித்த மூத்த நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை உடனடியாக, விண்வெளியில் இருந்து திரும்ப அழைத்து வருவதில் சிக்கல் எழுந்தது.இந்நிலையில், போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலமானது, பாதுகாப்பு காரணங்களால் விண்வெளி வீரர்கள் இல்லாமல் , விண்கலம் மட்டும் தனியாக திரும்பியது.

ஸ்டார்லைனர் விண்கலத்தை சோதனை செய்வதற்காக முதலில் சுமார் எட்டு நாட்கள் விண்வெளி பயணம் என்று திட்டமிடப்பட்ட நிலையில், விண்கலத்தின் என்ஜினில் உள்ள பல்வேறு சிக்கல்கள் காரணமாக, பூமி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, சிக்கல்களை சரிசெய்ய போயிங் மற்றும் நாசா தீவிரமாக முயற்சித்தும் பலனளிக்கவில்லை. இந்த சிக்கல்களால் ஸ்டார்லைனரின் விண்கலத்தில் பயணித்த நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் உடனடியாக திரும்ப அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டது. 

Also Read: Sunita Williams Birthday: விண்வெளியில் 2வது முறை பிறந்தநாளை கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்; இந்த வயதிலும் சாதனை..!

பூமி திரும்புதல்:

இதையடுத்து, அவர்களை பூமிக்கு கொண்டு வர  எலன் மஸ்க்கிஸ்ர்க்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலமானது, சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றது. இதன் மூலம் வில்மோர் மற்றும் வில்லியம்ஸுடன் பூமிக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இவர்கள் 2 பேரும் இந்த மார்ச் மாதம் 19 அல்லது 20 ஆம் தேதி  பூமி திரும்புவார்கள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. 

இந்நிலையில், விண்வெளியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சுனிதா வில்லியம்ஸ், எப்படி நடப்பது என்பது குறித்து நான் யோசித்து பார்க்கிறேன், மீண்டும் நினைவுக்கு கொண்டுவர முயற்சிக்கிறேன் என தெரிவித்தார். மேலும், இங்கிருந்து விண்வெளியை பார்ப்பது உற்சாகமாக இருக்கிறது. இங்கு தூங்குவது மிக எளிது. மேலும், இங்கு இருப்பதற்கு நம்பிக்கை மிகவும் முக்கியம் எனவும் வில்மோர் தெரிவித்தார்.

பூமியில் சவால்கள்:

பூமி திரும்பியவுடன் வீட்டிற்குச் செல்ல மாட்டார்கள். அதற்கு பதிலாக, அவர்கள் உடனடியாக தீவிர மருத்துவ வசதிக்கு கொண்டு செல்லப்படுவார்கள். ஏனென்றால், அவர்கள் சுமார் 9 மாதங்கள் புவியீர்ப்பு விசையை இல்லாத அல்லது மிக குறைவான புவியீர்ப்பு விசை இல்லாத இடங்களில் இருந்துள்ளனர். பல நாட்களுக்குப் பிறகு பூமிக்கு வருவதால், புவியீர்ப்பு விசையை உணரும் போது, அவர்களுக்கு நடப்பது என்பதே முடியாத காரியமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தகவல் தெரிவிக்கின்றன. ஒரு சிறிய பொருட்களைக்கூட தூக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். 

இவர்கள், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவே சுமார் 6 வாரங்கள் எடுக்கும் என்றும் கூறப்படுகிறது. முதலில் , நடப்பதற்கே பல வாரங்கள் பயிற்சி எடுக்க வேண்டி இருக்கும். 

Also Read: Trump-Zelensky: என்ன நடந்திட்டிருக்கு இங்க.! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோட் சூட் அணியாததுதான் பிரச்னையா .!

மூன்று கட்ட பயிற்சி:

விண்வெளியில் இருந்து திரும்பும் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சிகளில் தசைகளை மீண்டும் சரியான நிலைக்குக் கொண்டுவருவது மட்டுமல்ல - இது அவர்களின் முழு உடலையும் மீண்டும் பயிற்சி செய்வது பற்றியது. அவர்களின் இயல்பு வாழ்க்கைக்காக மூன்று கட்டங்களில் பயிற்சி கொடுக்கப்படும்.

  1. முதல் கட்டம் - எப்படி நடப்பது என்பதை மீண்டும் கற்றுக்கொள்வது மற்றும் தசை வலிமையை மீண்டும் உருவாக்குவது.
  2. இரண்டாம் கட்டம் - முழு உடலையும் வலுப்படுத்துவது மற்றும் இருதய அமைப்பை மீண்டும் உருவாக்குவது.
  3. மூன்றாம் கட்டம் - முழு உடல் செயல்திறனை மீண்டும் பெறுவது.

 இந்த கடுமையான பயிற்சி திட்டத்தை முடித்த பின்னரே வில்லியம்ஸும், வில்மோரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். இருப்பினும் அவர்களின் பல நாட்களாக விண்வெளி பயணத்தின் காரணமாக ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்தான தகவல் தெரியவில்லை. 

Also Read: ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: ஆப்பிளுடன் இணையும் ஏர்டெல்..ஆப்பிள் டிவி+ கண்டு மகிழலாம்.!