சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ்:
கடந்த ஜூன் மாதம் ஏவப்பட்ட ஸ்டார்லைனர் விண்கலமானது, விண்வெளி பயணங்களை சோதனை செய்யும் வகையில் இரண்டு விண்வெளி வீரர்களான இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்றது.
முதலில் சுமார் எட்டு நாட்கள் பயணம் என்று முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், விண்கலத்தின் என்ஜினில் உள்ள பல்வேறு சிக்கல்கள் காரணமாக, பூமி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பிரச்னைகளை சரிசெய்ய போயிங் மற்றும் நாசா அவசரமாக தீவிர முயற்சித்து வருகின்றன.
இந்த சிக்கல்களால் ஸ்டார்லைனரின் விண்கலத்தில் பயணித்த மூத்த நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை உடனடியாக திரும்ப அழைத்து வருவதில் சிக்கல் எழுந்துள்ளது.
பூமிக்கு எப்போது?.
இதன் விளைவாக, அவர்களை பூமிக்கு கொண்டு வர ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தை பயன்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது. எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான SpaceX க்ரூ டிராகன் விண்கலம், செப்டம்பரில் வழக்கமான நான்கு விண்வெளி வீரர்களுக்குப் பதிலாக இரண்டு விண்வெளி வீரர்களை மட்டுமே கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வில்மோர் மற்றும் வில்லியம்ஸுடன் பூமிக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இவர்கள் 2 பேரும் அடுத்த வரும்டம் பிப்ரவரி மாதம் பூமி திரும்பவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
மேலும், விண்வெளியில் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸின் காலமானது நீடித்துள்ள நிலையில் பாதிப்பு எதுவும் இல்லை எனவும் நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளியில் பிறந்தநாள்:
சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், விண்வெளியில் மீண்டும் தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
1965 இல் பிறந்து, முன்னாள் கடற்படை விமானியாகவும் பணியாற்றிய சுனிதா வில்லியம்ஸ்க்கு, வரும் செப்டம்பர் 19 அன்று 59 வயதாகிறது.
சுனிதா வில்லியம்ஸ் தனது 47வது பிறந்தநாளை 2012 ஆம் ஆண்டு ISS இல் தங்கியிருந்த போது கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Sunita Williams:விண்வெளியில் சிக்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ்.! எமோஷனலாக பேசிய தாய்.!