ஒரு பெண்ணின் காதில் சிறிய பாம்பு உள்நுழைந்து சிக்கிகொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பூமியில் மிகவும் கொடிய மற்றும் விஷமுள்ள உயிரினங்களில் முக்கிய இடத்தில் உள்ளது பாம்பு வகைகள். பாம்பு என்றால் படையும் என்பது ஊர் அறிந்த உண்மை. எவ்வளவு பெரிய தைரியசாலி, பலசாலியாக இருந்தாலும் பாம்பு முன் வந்தால் சிறு நடுக்கம் ஏற்பட்டு, உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை ஒரு சிலிர்ப்பை தரும்.  WHO (உலக சுகாதார அமைப்பின்) அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 81,000 முதல் 138,000 பேர் பாம்புக் கடியின் விளைவாக இறக்கின்றனர். 


அதேபோல், பாம்பு கடியால் பலரது வாழ்வு கடுமையாக பாதிக்கப்பட்டும் இருக்கிறது. ஆனால் சில சம்பவங்கள் மக்களை முற்றிலும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நேரங்களும் உள்ளன. சமீபத்தில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில், ஒரு பெண்ணின் காதில் சிறிய பாம்பு உள்நுழைந்து சிக்கிகொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 






யார் என்று நாம் அறியாத அந்த வீடியோவில், ஒரு பெண்ணின் காதில் மஞ்சள் நிற பாம்பு ஆழமாக மாட்டிக்கொண்டது. கையில் கையுறைகளை அணிந்து கொண்டு ஒரு மருத்துவர் அவரது காதில் இருந்து பாம்பை வெளியே எடுக்க முயற்சி செய்கிறார்.


மேலும் படிக்க : Viral Video: தேசியக் கொடியால் டூவீலரைத் துடைக்கும் டெல்லி மனிதர் - வைரல் வீடியோவால் கொதித்த இணையவாசிகள்!


பெண்ணின் காதில் இருந்து வெறும் பாம்பு தலை மட்டுமே வெளியே எட்டிப்பார்க்கிறது. மருத்துவர் பல முயற்சிகளை மேற்கொள்வதையும், அவளது காதில் இருந்த பாம்பு அவ்வபோது வாயை திறந்து மூடுகிறது. மருத்துவர் வெளியே எடுக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டும் அது வீணாகிவிட்டதாகத் தெரிகிறது.






இறுதிவரை அந்த பெண்ணின் காதில் இருந்து பாம்பு எடுக்கப்பட்டதா..? இல்லையா..?  என்பது கேள்விக்குறியுடன் முடிந்தது. முழுமையாக என்ன நடந்தது என்று தெரியாமல் வீடியோ பாதியுடன் முடிவடைந்தது.