Just In





Watch Video: திடீரென நடுரோட்டில் லேண்ட் ஆன விமானம் - தீப்பிழம்புகள் பறக்க வெடித்து சிதறும் காட்சிகள் - வீடியோ வைரல்
Watch Video: பிரேசிலில் வானில் பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென, சாலையில் விழுந்து வெடித்து சிதறும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

Watch Video: பிரேசிலில் வானில் பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென சாலையில் விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
விமானம் விழுந்து நொறுங்கி விபத்து:
பிரேசிலின் சாவ் பாலோவில் வெள்ளிக்கிழமை காலை ஒரு அதிர்ச்சியூட்டும் விமான விபத்து நிகழ்ந்தது, இதில் விமானி குஸ்டாவோ கார்னிரோ மெடிரோஸ் (44) மற்றும் விமானத்தின் உரிமையாளர், மூன்று குழந்தைகளின் தந்தை மற்றும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சரான மார்சியோ லூசாடா கார்பேனா (49) ஆகியோர் உயிரிழந்தனர். போர்டோ அலெக்ரேவுக்குச் சென்று கொண்டிருந்த சிறிய ரக விமானம், நாட்டின் மிகப்பெரிய நகரமான சாவ் பாலோ நகரத்திற்கு அருகிலுள்ள பார்ரா ஃபண்டா பகுதியில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில் விழுந்து நொறுங்கியது.
விபத்தின் கோர காட்சிகள்:
விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோவில், “பரபரப்பான அந்த சாலையில் பேருந்துகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் போன்றவை பயணித்துக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் வானில் பறந்து கொண்டிருந்த அந்த சிறிய ரக விமானம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி சரிந்தது. தொடர்ந்து சாலையின் நடுவே மோதி, திப்பிழம்புகள் பறக்க, கரும்புகையை கக்கியவாறு சறுக்கி சென்றது. இதனால் அங்கு பல அடி உயரத்திற்கு புகைமூட்டம் எழுந்தது” போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
4 பேர் காயம்:
விமானம் ஒரு அரசுப் பேருந்தின் பின்புறத்தில் மோதியதில், உள்ளே இருந்த ஒரு பெண் காயமடைந்தார். மேலும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீதும் மோதியது. அதில் காயமடைந்தவரும், பேருந்து பயணியுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். சிறிய காயங்களுடன் மேலும் நான்கு பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்துக்கான காரணம் என்ன?
விமானம் புறப்பட்ட தனியார் விமான நிலையத்திலிருந்து 3 மைல் (5 கிலோமீட்டர்) தொலைவில் விபத்து ஏற்பட்டதால், விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் கண்டறியவில்லை. விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று பிரேசில் விமானப்படை அறிவித்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் பிரேசிலில் நடந்த தொடர்ச்சியான கொடிய சிறிய விமான விபத்துகளில் இந்த சம்பவமும் ஒன்று. கடந்த ஆகஸ்ட் மாதம், சாவ் பாலோவிற்கு அருகிலுள்ள வின்ஹெடோவில், ஒரு வீட்டின் பின்புறத்தில் பயணிகள் விமானம் மோதியதில், அதில் பயணித்த 72 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.