Serbia : செர்பியாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


8 பேர் உயிரிழப்பு


செர்பியா நாட்டின் தலைநகர் பெல்கிரேடில் இருந்து தெற்கே 60 கிலோமீட்டர் (37 மைல்) தொலைவில் உள்ள செர்பியா நகரத்திற்கு அருகே நேற்று பிற்பகலில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் சுமார் 8 பேர் உயிரிழந்ததாகவும், 13 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  தாக்குதல் நடத்திய மர்ம நபர் வாகனத்தில் இருந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியதாக தகவல் வெளியாகி உள்ளது. 






இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்த 13 பேரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தி அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 


மற்றொரு சம்பவம்


முன்னதாக, கடந்த புதன்கிழமை செர்பியா நாட்டில் மத்திய பெல்கிரேடில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர் ஒருவர் பள்ளிக்குள் நுழைந்து  8 குழந்தைகள்  மற்றும் ஒரு பள்ளி காவலாளியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த மாணவரை போலீசார் பள்ளி வளாகத்திலேயே கைது செய்தனர் .


செர்பியாவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் என்பது மிகவும் அரிதானவை. ஆனால் இந்த வாரத்தில் மட்டுமே இரண்டு முறை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர்  இந்த வாரத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. 




மேலும் படிக்க


Gmail Blue Tick: ஜி-மெயிலிலும் வந்தது ப்ளூ டிக்… யார் யாருக்கு கிடைக்கும்? என்ன பயன்? தெரிந்துகொள்ளுங்கள்!


Buddha Purnima 2023: இன்று புத்த பூர்ணிமா… இந்த நாளில் செய்யவேண்டியவை என்ன, செய்யக்கூடாதவை என்னென்ன?