Viral Video : துருக்கில் நேற்று நடைபெற்ற மாநாட்டில்  ரஷ்ய பிரதிநிதியை, உக்ரைன் எம்.பி. தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளளது.


ரஷ்யா உக்ரைன் போர் ஓராண்டை கடந்தும் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த போரால் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா மற்றும் உக்ரைன் அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 


இந்நிலையில், துருக்கியின் தலைநகரான அங்காராவில் கருங்கடல் பொருளாதாரம் ஒத்துழைப்பின் பாராளுமன்ற சபையின் 61-வது மாநாடு நேற்று இரவு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பெருளாதாரம், தொழில்நுட்ப மற்றும் சமூகம் என இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்காக மேற்கொண்டு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்ற சபையின் 61-வது மாநாடு கூடியது. 


அப்போது, இந்த மாநாட்டில் உக்ரைன் எம்.பி. ஒலெக்சாண்டர் மரிகோவ்ஸ்கி கையில் தேசிய கொடியை வைத்திருந்தார். அப்போது, ரஷ்ய பிரதிநிதி ஒருவர் திடீரென உக்ரைன் எம்.பி.ஒலெக்சாண்டர் மரிகோவ்ஸ்கி கையில் வைத்திருந்த தேசிய கொடியை பிடுங்கி விறுவிறுப்பாக நடந்தார்.  ரஷ்ய பிரதிநிதியை பின்தொடர்ந்த உக்ரைன் எம்.பி. அவர் கையில் வைத்திருந்த தேசிய கொடியை பிடுங்கி அவரை கன்னத்தில் அறைந்தார். தொடர்ந்து அவரை விடாமல் கடுமையாக தாக்கினர். பின்னர்,  அங்கிருந்தவர்கள் வந்த இருவர்களுக்கு இடையே நடந்த தாக்குதலை தடுத்து நிறுத்தினர்.


இந்த சம்பவத்தை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டனர். பின்னர், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






இந்த சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் இப்ராஹிம் சைடன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "ரஷ்ய பிரதிநிதி உண்மையிலேயே இந்த அடிக்கு தகுதியானவர். அங்காராவில் நடந்த கருங்கடல் பொருளாதார நிகழ்வில் ரஷ்ய பிரிதிநிதி சண்டையிட்டு தேசிய கொடியை எம்.பி.ஒலெக்சாண்டர் மரிகோவ்ஸ்கி கையில் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கியுள்ளார்” என்று தெரிவித்தார். இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.




மேலும் படிக்க


Mamata Banerjee : 'வேற எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களிங்க...பாஜகவுக்கு வேண்டாம்' - மம்தா பானர்ஜி