மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள செனகல் நாட்டு நாடாளுமன்றத்தில் பெண் நாடாளுமன்ற உறுப்பினரின் கன்னத்தில் ஆண் நாடாளுமன்ற உறுப்பினர் அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த சம்பவத்தை தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பு செய்து வெளியிட்டுள்ளது.
செனகல் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே பதற்றம் நிலவி நிலையில், இச்சம்பவம் அரங்கேறியிருக்கிறது. பட்ஜெட் தாக்கலின் போது, ஆளும் கூட்டணியின் ஆமி என்டியாயே கினிபியை எதிர்க்கட்சி உறுப்பினர் மசாதா சாம்ப் நடந்து சென்று அறைந்தார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, சாம்பின் மீது மசாதா ஒரு நாற்காலியை தூக்கி எறிந்தார். இதற்கு மத்தியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டு அவமதித்து கொண்டனர். இதனால், நாடாளுமன்ற கூட்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் நடந்த தேர்தலில், ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்ததிலிருந்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால், 2024 ஆம் ஆண்டில் மேக்கி சால் மூன்றாவது முறையாக அதிபராவதில் பெரிய தடை ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது முறையாக சால் போட்டியிடத் திட்டமிட்டுள்ளாரா என்பதைத் தெளிவாகக் கூற மறுத்துவிட்டார். இந்த நடவடிக்கை கால வரம்பு மற்றும் முந்தைய வாக்குறுதியை மீறும் செயல் என எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன.
மூன்றாவது முறையாக போட்டியிடவைக்க அனுமதிக்கும் வகையில் அரசியலமைப்பு சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என சாலின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக நாடாளுமன்றம் கூடியபோது செப்டம்பரில் மற்றொரு மோதல் வெடித்தது.
மூன்றாவது முறையாக அதிபராக போட்டியிட போவதாக கூறப்படும் சாலை எதிர்த்து ஆன்மீக தலைவர் ஒருவர் பேசியிருந்தார். அதை, கினிபி கடுமையாக சாடியிருந்தார். கினிபி கூறியது குறித்து நாடாளுமன்றத்தில் சாம்ப் விரிவாக பேசியிருந்தார்.
இதுகுறித்து விரிவாக பேசிய சாம்ப், "மிஸ்டர் பிரசிடெண்ட், ஆன்மீக தலைவர் மாரபுட்டை அவமதித்ததற்காக தீர்ப்பாயத்தின் முன் துணை தலைவர் நின்று கொண்டிருக்கிறார்.
அந்த கருத்தை கினிபி ஏளனம் செய்திருந்தார். இதையடுத்துதான், அவரை சாம்ப் அறைந்தார். இந்த சண்டையின் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த விவாதத்தைத் தூண்டியது.