சென்னை கொட்டிவாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில், உடற்கல்வி ஆசிரியர் அடித்ததால் 12 ஆம் வகுப்பு மாணவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


மாணவனை தாக்கிய ஆசிரியர்:


சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் அண்ணன் - தம்பி ஆகிய இருவரும் படித்து வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு, தனியார் பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது, தம்பி தூங்கியதால் ஆசிரியர் அடித்ததாக கூறப்படுகிறது. 


ஆசிரியர் அடித்ததை, பெற்றோரிடம் மாணவன் தெரிவித்துள்ளார். பள்ளிக்கு சென்று, ஆசிரியரிடம் மாணவனை தாக்கியது தொடர்பாக வாக்குவாதத்தில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர். 


இச்சம்பவத்தையடுத்து, அண்ணந் தம்பி இருவரும் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை பள்ளிக்கு செல்லவில்லை என்றும் நேற்று பள்ளிக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. நேற்று சென்றபோது, அண்ணனை அனைத்து மாணவர்கள் முன்னிலையில் உதவி பேராசிரியர் அடித்ததாக கூறப்படுகிறது.


மாணவன் தற்கொலை


இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதையடுத்து இன்று காலை மாணவன் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. 


இச்சம்பவம் குறித்து பெற்றோர் தெரிவிக்கையில், மூத்த மகனிடம் போதை பழக்கத்தை பயன்படுத்தியதாக எழுதி கையப்பமிட சொல்லி ஆசிரியர் அடித்துள்ளார். மேலும், அனைத்து மாணவர்களின் முன்னிலையில் இழுத்து சென்று தாக்கியுள்ளார். இதனால்தான், பெரும் மன உளைச்சலுக்கு ஆளான தனது மகன், தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


குவிந்த காவல்துறையினர்:


மேலும், பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் இச்சம்பவத்தால், பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இச்சம்பவத்தை அறிந்த காவல்துறையினர், பள்ளிகளில் ஏதேனும் அசம்பாவிதம் நடாக்காத வகையில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


Also Read: வீட்டில் நுழைந்த திருடன்... பள்ளி மாணவியை தாக்கி விட்டு தப்பியோட்டம் - சீர்காழியில் பரபரப்பு..!