உலகில் முதல் முறையாக பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட மரபணு நிறுவனத்தால் வெற்றிகரமாக ஒரு காட்டு ஆர்க்டிக் ஓநாய் குளோனிங் செய்யப்பட்டுள்ளது.


உலகின் முதல் குளோனிங்


கனடாவின் ராணி எலிசபெத் தீவுகளின் உயர் ஆர்க்டிக் டன்ட்ராவை பூர்வீகமாகக் கொண்ட வெள்ளை ஓநாய் அல்லது துருவ ஓநாய் என்றும் அழைக்கப்படும் ஆர்க்டிக் ஓநாய் குளோனிங் தொழில்நுட்பத்தின் மூலம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது அரிதான மற்றும் அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதில் ஒரு புதிய மற்றும் குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையாகக் கருதப்படுகிறது. மாயா என்று அந்த குளோனிங் செய்யப்பட்டுள்ள ஓநாய்க்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. குளோனிங் செய்யப்பட்ட ஆர்க்டிக் ஓநாய் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓநாய்க்கு டொனேட் செய்யபட்ட செல் ஒரு காட்டு பெண் ஆர்க்டிக் ஓநாயின் தோல் மாதிரியிலிருந்து எடுக்கப்பட்டது ஆகும். அதன் ஓசைட் ஒரு பெண் நாயிடமிருந்து எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளனர். 



பீகில் நாய் பிரசவித்த ஓநாய்


குளோபல் டைம்ஸ் அறிக்கையின்படி, மாயாவின் வாடகைத் தாய் ஒரு பீகிள் இன நாய் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. பழங்கால ஓநாய்களுடன் நாய்களின் மரபணு வம்சாவளி ஒத்துப்போவதால் அவற்றின் மூலம் குளோனிங் வெற்றிகரமாக செய்ய முடியும் என்று கண்டறியப்பட்டது. எனவேதான் இதற்கு நாயை தேர்ந்தெடுத்ததாக கூறியுள்ளனர். பீகில் என்ற நாய் இனம் வளர்ச்சியிலும், உடல்வாகிலும் ஆர்க்டிக் ஜீனை கொண்டிருப்பதாலும் அதனை பயன்படுத்தியுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்: மன்னிப்பு கேட்கத்தயாரா இருக்கேன்.. ஆனா எதுக்குடா மன்னிப்பு கேட்கணும்? - கொந்தளித்த ஆ.ராசா


உலகின் முதல் குளோனிங்


"அழிந்துவரும் விலங்குகளை காப்பாற்ற குளோனிங் முறையை பின்பற்றும் திட்டத்தில் முதன்முறையாக ஆர்க்டில் ஓநாய் பயன்படுத்தப் பட்டது. ஆர்க்டிக் ஓநாய் குளோனிங் செய்வதற்கான ஆராய்ச்சியை 2020 ஆம் ஆண்டு நாங்கள் ஹார்பின் போலார்லேண்டுடன் தொடங்கினோம். இரண்டு வருட கடினமான முயற்சிகளுக்குப் பிறகு, ஆர்க்டிக் ஓநாய் வெற்றிகரமாக குளோனிங் செய்யப்பட்டது. உலகில் இப்படி ஒரு உயிரினத்தை குளோனிங் செய்வது இதுவே முதல்முறை,” என்று பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட சினோஜீன் பயோடெக்னாலஜி கோவின் பொது மேலாளர் மி ஜிடாங் கூறியதாக குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.



எப்படி சாத்தியமானது?


நிறுவனத்தின் துணைப் பொது மேலாளரான ஜாவோ ஜியான்பிங்கின் கூற்றுப்படி, அணுக்கரு (ஒரு செல்லில் இருந்து கருவை அகற்றும் செயல்முறை) ஓசைட்டுகள் மற்றும் சோமாடிக் செல்கள் ஆகியவற்றிலிருந்து 137 புதிய கருக்களை உருவாக்குவதன் மூலம் இந்த செயல்முறை தொடங்கியது, அதைத் தொடர்ந்து 85 கருக்களை ஏழு பீகில் நாய்களின் கருப்பைக்கு மாற்றினோம். அதன்பிறகுதான் ஆரோக்கியமான ஓநாயாகப் பிறந்தது. குளோனிங், உயிரணுக்கள், திசுக்கள் போன்ற உயிரினங்களின் நகல்களை உருவாக்கும் செயல்முறை, முதன்முதலில் 1996 இல் ஒரு ஸ்காட்டிஷ் விஞ்ஞானியால் செயல்முறைப் படுத்தப்பட்டது. அவர் ஒரு விலங்கை உருவாக்க இந்த முறையை பயன்படுத்தினார். அவர் டோலி என்ற செம்மறி ஆட்டை உருவாக்கினார். வயது வந்த செம்மறி ஆடுகளின் மடியில் இருந்து எடுக்கப்பட்ட செல்லைப் பயன்படுத்தி அது உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண