Pakistan-Saudi Airlines Fire Video: பாகிஸ்தானின் பெஷாவர் விமான நிலையத்தில் சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தின் தரையிறங்கும் கருவி ( landing Gear ) தீப்பிடித்தது. அப்போது பயணம் செய்த 297 பயணிகளும், பணியாளர்களும் ஊதப்பட்ட ஸ்லைடுகளைப் பயன்படுத்தி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
சவு ஏர்லைஸ் விமானத்தில் பற்றிய தீ:
இந்நிலையில், இந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் பெஷாவர் விமான நிலையத்தில் இன்று சவுதி ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்தது. விமானத்தின் தரையிறங்கும் பகுதியில் தீ பற்றியதாக கூறப்படுகிறது. விமானத்தில் இருந்த 276 பயணிகள் மற்றும் 21 பணியாளர்கள், ஊதப்பட்ட ஸ்லைடைப் பயன்படுத்தி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என ARY நியூஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் உள்ளூர் செய்திகளின்படி, விமானம் பெஷாவரில் இருந்து சவுதி அரேபியாவின் ரியாத் நோக்கி பயணம் செய்ய இருந்ததாக கூறப்படுகிறது.
பயணிகள் வெளியேற்றப்படும் காட்சிகள்:
இச்சம்பவத்தின் காணொளிகள் தரையிறங்கும் கருவிகளில் தீப்பற்றியதை, தீயணைப்பாளர்கள் அணைப்பதையும் மற்றும் மக்கள் ஸ்லைடைப் பயன்படுத்தி விமானத்தைவிட்டு வெளியேற்றுவதையும் காட்டியது.
தீ அணைக்கப்படும் காட்சிகள்:
இந்நிலையில் தீ பற்றிய காரணம் குறித்து, தெளிவான தகவல் கிடைக்கப்பெறவில்லை. இதுகுறித்து, விமான நிலைய அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
Watch Video: பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது.. எழுந்து நின்று மரியாதையளித்த ரஷ்ய அதிகாரிகள்!