உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ரஷ்யாவும், வடகொரியாவும் தவிர்க்க முடியாத நாடுகள் ஆகும், உலகின் வல்லரசு நாடாக திகழும் அமெரிக்காவுடன் பல்வேறு விவகாரங்களில் முரண்பட்டு நிற்கும் நாடாக இந்த இரு நாடுகளும் தற்போது வரை திகழ்கிறது.


வட கொரிய அதிபருக்கு கார் ஓட்டிய ரஷ்ய அதிபர்:


அமெரிக்கா எதிர்ப்பு மனநிலை கொண்டதாலே ரஷ்யாவும், வடகொரியாவும் ஓரளவு நெருக்கமான உறவு கொண்டுள்ளது. இந்த இரு நாடுகளும் இந்தளவு வலுவாக இருப்பதற்கு அந்த நாடுகளின் தலைவர்கள் முக்கிய காரணம் ஆகும். உலகின் சக்திவாய்ந்த தலைவர்களாக ரஷ்ய அதிபர் புதினும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் உள்ளனர்.


இந்த நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வட கொரிய சென்ற கிம் ஜாங் உன்னிற்கு அந்த நாட்டில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்ற ரஷ்ய அதிபர் புதின் தன்னுடைய காரிலே அழைத்துச் சென்றார். கிம் ஜாங் உன்னை தனது காரில் அழைத்துச் சென்ற ரஷ்ய அதிபர் புதின், தானே கார் ஓட்டினார். அவரது பக்கத்து சீட்டில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அமர்ந்திருந்தார்.






இருவரும் சிரித்துப் பேசி மகிழ்ச்சியுடன் வாகனத்தில் செல்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஷ்ய அதிபர் புதின் ஓட்டிச் சென்ற கார் அவரது பாதுகாப்பிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வாகனம் ஆகும். அந்த காரின் பெயர் ஆரஸ் செனட். 


இந்தாண்டு ரஷ்யா வந்திருந்த கிம் ஜாங்-க்கு ரஷ்யாவின் பிரத்யேக வாகனமான லிமோசானை பரிசாக வழங்கிய புதின், தற்போதும் அவருக்கு அதே காரை பரிசாக வழங்கியுள்ளார்.


உற்றுநோக்கும் அமெரிக்கா:


உலகின் சக்திவாய்ந்த தலைவரான புதின், மற்றொரு சக்திவாய்ந்த தலைவரான கிம் ஜாங் உன்-ஐ காரில் தனது பக்கத்தில் உட்கார வைத்து கார் ஓட்டிய சம்பவம் உலக நாடுகள் கவனத்தை ஈர்த்துள்ளது.


இந்த இரு தலைவர்களின் சந்திப்பை உலக நாடுகள் உற்றுநோக்கியுள்ள நிலையில், அமெரிக்காக மிகத் தீவிரமாக கவனித்து வருகிறது. இவர்களின் சந்திப்புகளின்போது இரு நாட்டு நட்புறவு, இரு நாடுகள் இடையேயான வர்த்தகம், இரு நாடுகள் இடையேயான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


புதின் – கிம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சந்தித்துக் கொண்டபோது இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் அன்பளிப்புகளை பகிர்ந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Surya: கள்ளச்சாராய மரணம்! விஷச்சாராயத்தை தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகம் - நடிகர் சூர்யா கடும் கண்டனம்


மேலும் படிக்க: குழந்தைகளுக்கு மாதம் ரூ.5000; படிப்பு செலவு; ரூ.5 லட்சம் டெபாசிட்- கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்வரின் அறிவிப்புகள்!