கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி முதல் உக்ரைன் - ரஷ்யா இடையே ராணுவத் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. "சிறப்பு இராணுவ நடவடிக்கைகள்" என்ற போர்வையின் கீழ், உக்ரைன் மீது ரஷ்யா இந்த படையெடுப்பை நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்பு செயலிழந்தபோதிலும், ராணுவ வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 


இந்நிலையில், கத்தார் நாடு தோஹாவில் நடைபெற்று வரும் உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டடிக் உலகக்கோப்பை போட்டியில் ரஷ்ய வீரர் ஒருவர் டி-சர்ட் மூலம் உக்ரைனுக்கு சொல்லி இருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ’பாரலல் பார்ஸ்’ எனப்படும் பிரிவின் கீழ் நடைபெற்ற போட்டியில், உக்ரைனைச் சேர்ந்த இலியா கோவ்டுன் தங்கப் பதக்கமும், கசாக்ஸ்தான் நாட்டைச் சேர்ந்த மிலாட் கரிமி வெள்ளிப்பதக்கத்தையும், ரஷ்யாவின் இவன் குலியாக் வெண்கலப் பதக்கமும் வென்றனர். 




மேலும் படிக்க: Russia Ukraine War: ரஷ்யாவுக்கு ஆதரவு... இந்தியாவுக்கு மிரட்டல்... எஸ்-400 பிரச்னையை கையில் எடுக்குமா அமெரிக்கா?




போட்டி முடிந்து பதக்கம் அளிக்கும் விழாவிற்காக வெற்றி பெற்ற வீரர்கள் மேடைக்கு வந்தனர். அப்போது மேடை ஏறிய ரஷ்ய வீரர் இவன் குலியாக், தனது டி-சர்ட்டில் ‘Z' என்ற எழுத்து பொறிக்கப்பட்ட சட்டையை அணிந்து வந்திருந்தார். ரஷ்ய அதிபர் புடின் ஆதவளார்கள் அணிந்து கொள்ளும் இந்த முத்திரையை அவர் அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், டிசர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ‘Z' எழுத்து மூலம், உக்ரைன் நாட்டிற்கு செய்தி சொல்லி இருக்கிறார் இவன் குவியாக். 



மேலும், பதக்கம் வாங்கி கொண்டு கசாக்ஸ்தான் வீரருடன் கை குலுக்கிய ரஷ்ய வீரர், உக்ரைன் வீரரை கண்டு கொள்ளாமல் போனதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும், விளையாட்டு வட்டாரத்தில் இச்சம்பவம் முகம் சுளிக்க வைத்திருக்கிறது. விளையாட்டு துறையைப் பொறுத்தவரை, கால்பந்து உலகக்கோப்பை, குளிர்கால ஒலிம்பிக் தொடர் ஆகியவற்றில் இருந்து ரஷ்யாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரே விளையாட்டைச் சேர்ந்த இரு விரர்கள் மோதி கொள்வது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 


கடந்த சனிக்கிழமை நிலவரப்படி, உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் தாக்குதால் கிட்டத்தட்ட 227 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 525 பேர் காயமடைந்து உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண