300 ஆண்டுகள் பழமையான கடற்கன்னி வடிவில் கிடைத்துள்ள மம்மியை ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். எகிப்தியக் கலாசாரத்தின்படி இறந்த உடல்களைப் பதப்படுத்துதல், இறந்தவர்களுக்குச் செய்யப்படும் சடங்குகளுள் ஒன்று. அக்காலத்தில், இறந்த பிறகு மற்றொரு வாழ்க்கை உண்டு என்று எகிப்தியர்கள் கருதினார்கள். மறுவாழ்வுக்கு உடலைப் பதப்படுத்துதல் என்பது மிகவும் முக்கியம் என்றும் நினைத்தார்கள். அது மட்டுமல்லாமல், உடலைப் பதப்படுத்தும்போது அதனுடன் தங்கம், வீட்டு விலங்குகள் ஆகியவற்றையும் சேர்த்துப் புதைப்பர். அவ்வாறு காலத்தால் அழியாக மனித மம்மிகளையும் விலங்குகளின் மம்மிகளையும் உலகமெங்கும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.



அந்த வகையில் தற்போது, ஜப்பானின் பசிபிக் கடலிலுள்ள சிகோகு என்ற தீவின் அருகே மீனவர்கள் மீன்பிடிக்கும் போது, 300 வருடங்கள் பழமையான கடற்கன்னி வடிவிலான மம்மி ஒன்று கிடைத்திருக்கிறது. இதனை பற்றிய தகவல்களை பெற, தொல் பொருள் விஞ்ஞானிகள் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது பார்ப்பதற்கு கடல் கன்னி போலவே இருக்கிறது. இது வெறும் 12 இன்ச் மட்டுமே நீளமாக உள்ளது. இது 1736- 1741 ஆம் ஆண்டுக்குள்பட்ட காலகட்டத்தில் ஜப்பானின் சிகோகு பகுதியில் வாழ்ந்த உயிரினமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அந்த மம்மி கைப்பற்றப்பட்ட போது அசோகுசி நகரத்திலுள்ள கோயிலில் இருந்திருக்கிறது. ஜப்பானின் அசாகி ஷிம்புன் என்ற செய்தித் தாள் அளித்த தகவலின்படி கைப்பற்றப்பட்டுள்ள மம்மி பசிபிக் கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கையில் கிடைத்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மம்மியை கைப்பற்றிய மீனவர்கள் அதை தங்கள் வீடுகளுக்கு கொண்டு வந்தனர். பார்ப்பதற்கு கடல் கன்னி போலவே தோற்றம் கொண்டு இருக்கும் இந்த மம்மி வெறும் 12 இன்ச் மட்டுமே நீளமாக உள்ளது. இந்த மம்மிக்கு, அதன் மேற்பகுதி கூர்மையான பற்கள், சற்று விகாரமான முகம், இரண்டு கைகள், தலையில் முடி புருவமுடன் கண்கள் போன்றவை மனிதர்களுக்கு இருக்கும் பகுதி போல உள்ளது.



குறிப்பாக கீழ் பகுதியில் மீன்களை போல செதில்கள் மற்றும் வால் போன்ற குறுகிய முனை காணப்படுகிறது. சுருக்கமாக சொல்ல போனால் கடற்கன்னியை போல் காணப்படுகிறது. இதுகுறித்து ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் சிடி ஸ்கேன் மூலம் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும், இது 1736- 1741 ஆம் ஆண்டுக்குள்பட்ட காலகட்டத்தில் ஜப்பானின் சிகோகு பகுதியில் வாழ்ந்த உயிரினமாக இருக்கலாம் என சி.டி. ஸ்கேனிங் உள்ளிட்ட பரிசோதனைகளின் முடிவில், விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஜப்பானின் பிரபல செய்தித்தாள் அளித்திருக்கும் தகவலின்படி, “கைப்பற்றப்பட்டுள்ள மம்மி `பசிபிக் கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கையில் வலையில் கிடைத்தது’ என்ற குறிப்பிட்டுள்ளது. அந்த மம்மியை கைப்பற்றிய மீனவர்கள், அதை தங்கள் வீடுகளுக்கு கொண்டு வந்து, பாதுக்கப்பதாக குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து ஓகாயாமா நாட்டுப்புற கழகத்தை சேர்ந்த ஹிரோஷி கினோஷிதா கூறுகையில், ஜப்பானை சேர்ந்த கடற்கன்னிகளுக்கு அழியா தன்மை உள்ளது. இதனால் அதன் இறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு இறப்பே இல்லை என சொல்கிறார்கள். இது போல் ஒரு பெண் கடற்கன்னியின் மாமிசத்தை சாப்பிட்டு 800 ஆண்டுகள் வரை வாழ்ந்து வந்தார் என்கிறார்.