கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் உக்ரைன் - ரஷ்யா இடையே ராணுவத் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. "சிறப்பு இராணுவ நடவடிக்கைகள்" என்ற போர்வையின் கீழ், உக்ரைன் மீது ரஷ்யா இந்த படையெடுப்பை நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்பு செயலிழந்தபோதிலும், ராணுவ வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைவிதித்து வருகின்றது. ரஷ்யாவை எதிர்த்து ஐநாவில் தீர்மானம் நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை மூன்று முறை நடந்த வாக்கெடுப்பில், இந்தியா பங்கேற்கவில்லை. ரஷ்யாவுக்கும் ஆதரவு அளிக்காமல், உக்ரைனுக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலை வகித்து வருகிறது.
நடுநிலை வகிக்கும் இந்தியா:
உக்ரைனில் தங்கி இருக்கும் 20,000 இந்திய மாணவ மாணவிகளை பத்திரமாக மீட்கவே, இந்தியா நடுநிலை வகித்து வருவதாக தெரிவித்து வருகிறது. ஆனால், இந்தியாவின் இந்த விளக்கத்தை அமெரிக்கா ஏற்பதாக தெரியவில்லை.
மேலும், இந்தியாவின் இந்த செயல்பாட்டால், அமெரிக்கா காட்டாமாக இருப்பதாக தெரிகிறது. இதனால், ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் இந்தியா ரஷ்யாவுக்கு எதிராகவும், அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் செயல்பட வேண்டும் என அமெரிக்கா கட்டாயப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்-400 பிரச்னை
பல ஆண்டுகளாகவே ரஷ்யாவுடன் நல்லுறவில் இருந்து வருகிறது இந்தியா. அமெரிக்காவுடன் சமீப காலத்தில்தான் நெருக்கம் காட்டி வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கி இருக்கிறது. அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி இந்தியா இந்த ஏவுகணையை கொள்முதல் செய்கிறது. ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் நாடுகள் மீது அமெரிக்கா தனது உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொருளாதார தடைகள் விதித்து வருகிறது. இதில், இந்தியாவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா செயல்படும் பட்சத்தில், இந்த எஸ்-400 விவகாரத்தை அமெரிக்கா கையில் எடுக்கும் என தெரிகிறது.
மீட்கப்படும் இந்திய மாணவர்கள்:
தொடர்ந்து இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளா, உக்ரைனில் சிக்கி இருந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளை நாட்டுக்கு அழைத்து வந்திருப்பதாக பிரதமர் மோடி பெருமிதல் தெரிவித்துள்ளார். இன்னும் அங்கு சிக்கி இருக்கும் மாணவ மாணவிகளை மீட்டு வர விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்