Russia-Ukraine War LIVE : பிரதமர் மோடியுடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா இன்று காலை போர் தொடுத்துள்ளது. போரின் அடுத்தடுத்த கட்ட நகர்வுகளை கீழே உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 26 Feb 2022 06:34 PM
பிரதமர் மோடியுடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு

உக்ரைனில் குடியிருப்புப் பகுதிகளின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக, பிரதமர் மோடியிடம் உக்ரைனிய அதிபர் ஆதங்கம்

பிரதமர் மோடியுடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு

பிரதமர் மோடியுடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு

நாட்டுக்காக போராட நினைப்பவர்களுக்கு ஆயுதங்களை வழங்க உக்ரைன் தயாராக இருக்கிறது - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

நாட்டுக்காக போராட நினைப்பவர்களுக்கு ஆயுதங்களை வழங்க உக்ரைன் தயாராக இருக்கிறது - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

ரஷ்ய தாக்குதலில் உக்ரைனியர்கள் 198 பேர் உயிரிழப்பு..

ரஷ்ய தாக்குதலில் உக்ரைனியர்கள் 198 பேர் உயிரிழப்பு..

உக்ரைன் நாட்டை ஒருபோதும் யாருக்கும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை. குழந்தைகளுக்காக போராடுகிறோம் - உக்ரைன் அதிபர்

உக்ரைன் நாட்டை ஒருபோதும் யாருக்கும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை. குழந்தைகளுக்காக  போராடுகிறோம் - உக்ரைன் அதிபர்

உக்ரைனில் ராணுவ ஆட்சியை அமல்படுத்த ரஷ்ய அதிபர் புதின் திட்டம்..

உக்ரைனில் ராணுவ ஆட்சியை அமல்படுத்த ரஷ்ய அதிபர் புதின் திட்டம்..

உக்ரைனில் இருந்து நாடு திரும்பும் இந்தியர்கள்

உக்ரைனில் மீட்கப்பட்ட இந்தியர்களில் ஒரு குழு, நாளை சிறப்பு விமானம் மூலம் இந்தியா வர உள்ளனர்.

உக்ரைனில் இருந்த இந்திய மாணவர்கள் ருமேனியா எல்லை பகுதிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்

உக்ரைனில் மாட்டிக்கொண்ட இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு மேற்கு உக்ரைனில் உள்ள வெளியுறவுத்துறை முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

உக்ரைன் உடன் பேச்சுவார்த்தைக்கு தயார் - ரஷ்யா

உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால்  உடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெர்ஜி லாவ்ரோம் அறிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு தயார் - ரஷ்யா திடீர் அழைப்பு

பேச்சுவார்த்தைக்கு தயார் - ரஷ்யா திடீர் அழைப்பு

செர்னோபில் அணு உலையில் இருந்து பயங்கர கதிர்வீச்சு வெளியேற்றம்

உக்ரைன் அணு உலை நிறுவனம், செர்னோபில் அணு உலையில் இருந்து அதிக அளவில் கதிர்வீச்சு வெளியேறியது பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Russia-Ukraine War: ரஷ்ய அதிபருடன் பிரான்ஸ் அதிபர் ஆலோசனை..

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் வேளையில் ரஷ்ய அதிபர் புடினுடன் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆலோசனை நடத்தி வருகிறார். 

Russia-Ukraine War : 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் - உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம்

உக்ரைன் நடத்திய பாதுகாப்பு தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

உக்ரைன் - ரஷ்யா போர் : பதுங்கு குழியில் தமிழக மாணவர்கள் தஞ்சம்

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள வினிட்சியா பல்கலைக்கழக தமிழக மாணவர்கள் சுரங்க பாதைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

நோட்டா நாளை அவசர ஆலோசனை..

ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பாக நோட்டா அமைப்பின் அவசர ஆலோசனை நாளை காலை நடைபெற இருக்கிறது 

உக்ரைனில் 2வது நாள் தாக்குதலை தொடங்கியது ரஷ்யா...

உக்ரைனில் 2வது நாள் தாக்குதலை தொடங்கி ரஷ்யா நடத்தி வருகிறது. 

உக்ரைன் - ரஷ்யா தாக்குதல் : 137 பேர் பலி, 316 பேர் காயம்

ரஷ்ய படையெடுப்பில் இதுவரை 10 இராணுவ அதிகாரிகள் உட்பட 137 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 316 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

உலக நாடுகளில் இருந்து தனித்து விடப்பட்டுள்ளோம் : உக்ரைன் அதிபர்

உலக நாடுகளில் இருந்து தனித்து விடப்பட்டு, ரஷ்யாவுக்கு எதிராக தன்னந்தனியாக போராடி வருகிறோம் என்று உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி வேதனையாக தெரிவித்துள்ளார். 

ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்தது அமெரிக்கா...

உக்ரைன் நாட்டில் நுழைந்து தாக்குதல் நடத்திய ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்து அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். 

ரஷ்யாவை எதிர்க்க படைகளை அனுப்பமாட்டோம் : அமெரிக்கா அதிபர்

உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யாவை எதிர்த்து படைகளை அனுப்பமாட்டோம் என்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

படையெடுப்பை தவிர வேறு வழி தெரியவில்லை - ரஷ்ய அதிபர் புடின்

உக்ரைன் மீது படையெடுப்பை தவிர வேறு வழி தெரியவில்லை என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ஊரடங்கு...

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

உலக நாடுகளில் இருந்து ரஷ்யா துண்டிப்பு : உக்ரைன் அதிபர்

உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா உலக நாடுகளில் இருந்து துண்டிக்கப்பட்டுவிட்டதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். 

இந்தியர்களின் பாதுகாப்புக்கு முதலில் முன்னுரிமை - மத்திய அரசு

உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கு முதலில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

செர்னோவில் பகுதிக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவம்...

உக்ரைனில் உள்ள செர்னோவில் பகுதிக்குள் ரஷ்ய ராணுவம் நுழைய முயற்சி செய்து வருவதாக உக்ரைன் அதிபர் தகவல் தெரிவித்துள்ளார்.

Russia-Ukraine War : 200 இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக தங்க வைப்பு..

உக்ரைன் நாட்டில் 200க்கு மேற்பட்ட இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கபட்டுள்ளதாக இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. 

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க அதிகாரிகள் நியமனம்...

உக்ரைனில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை மீட்க அதிகாரிகளை நியமனம் செய்தது வெளியுறவுத்துறை அமைச்சகம். உக்ரைன் எல்லை நாடுகளான ஹங்கேரி,போலந்து மூலம் இந்தியர்களை மீட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பொருளாதார சாவல்களை சாமாளிக்க தயாராக உள்ளோம் : ரஷ்யா

 தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சாவல்களை சாமாளிக்க தயாராக உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ஆண்டனோவ் விமானநிலையத்தை கைப்பற்றிய ரஷ்யா...

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள ஆண்டனோவ் விமானநிலையத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக ரஷ்யா தகவல் தெரிவித்துள்ளது. 

உக்ரைன் விவகாரம் : பிரதமர் நரேந்திர மோடி- ரஷ்ய அதிபர் புதின் இன்று இரவு ஆலோசனை

உக்ரைன் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு ரஷ்ய அதிபர் புதினுடன் பேச இருக்கிறார்.





தமிழக மாணவர்களுக்கு உதவ தொடர்பு அலுவலர் நியமனம்..

உக்ரைனில் சிக்கி தவித்து வரும் தமிழக மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களுக்கு உதவ தொடர்பு அலுவலராக ஜெசிந்தா லாசரஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

Russia-Ukraine War :பிரிட்டன் அமைச்சருடன் அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆலோசனை..

உக்ரைன்- ரஷ்யா போர் விவகாரம் தொடர்பாக பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சருடன் மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆலோசனை நடத்தி வருகிறார். 

இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் : தூதரகம் அறிவுரை

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் வெடிகுண்டு வெடித்தாலொ, அபாய சைரன் ஒலித்தாலோ பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைன் தலைநகரான கீவ் நகரின் வடக்கு பகுதிக்குள் நுழைந்தது ரஷ்ய ராணுவம்

உக்ரைன் தலைநகரான கீவ் நகரின் வடக்கு பகுதிக்குள் நுழைந்தது ரஷ்ய ராணுவம்

Russia-Ukraine War : உக்ரைனில் நிலைமை மோசமாக உள்ளது : தமிழ்நாடு மாணவி தகவல்

உக்ரைனில் நிலைமை மோசமாக உள்ளதால் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை என்று அந்நாட்டில் பயின்றுவரும் தமிழ்நாட்டை சேர்ந்த பிரியா என்ற மாணவி தகவல் தெரிவித்துள்ளார். 

கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு

உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களுக்காக டெல்லியில் கூடுதல் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன

உக்ரைன் தலைநகருக்குள் நுழைந்த ரஷ்யா - எதிர்ப்பு தெரிவிக்காத உக்ரைன் படைகள்..!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, தலைநகருக்குள் நுழைந்துள்ளதாக உக்ரைன் எல்லை பாதுகாப்புப் படை தகவல் கூறியுள்ளது. கிரைமியா, டான்பாஸ், பெலாரஸ், டிரான்ஸ்னிஸ்டிரியா ஆகிய பகுதிகளின் வழியாக உக்ரைனுக்குள் நுழைந்து ரஷ்யா தாக்குதல் நடத்தியது. கீவ் நகரில் உள்ள உக்ரைன் படைகள் ரஷ்ய படைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

”நாங்க பாதுகாப்பா உணரல.. பங்கர்ஸ்ல ஒளிஞ்சுக்கணும்னு சொல்லி இருக்காங்க” - சவும்யா பால், இந்திய மாணவி

சுரங்க மெட்ரோ ரயில்நிலையங்களிலும், பதுங்கு குழிகளிலும் பாதுகாப்பாக இருங்கள் - இந்திய தூதரகம்

சுரங்க மெட்ரோ ரயில்நிலையங்களிலும், பதுங்கு குழிகளிலும் பாதுகாப்பாக இருங்கள் - இந்திய மாணவர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கம் இல்லை - புடின்

உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கம் இல்லை. உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் - புடின்

2,320 கேரள மாணவர்கள் உக்ரைனில் இருந்து அழைத்து வரப்படவேண்டும் - கேரள முதல்வர் பினராயி விஜயன்

2,320 கேரள மாணவர்கள் உக்ரைனில் இருந்து அழைத்து வரப்படவேண்டும் - கேரள முதல்வர் பினராயி விஜயன்

அச்சம்.. பரபரப்பு.. யானை பலத்துடன் ரஷ்யா.. உக்ரைன் - ரஷ்யா ராணுவ பலம் ஒப்பீடு..!

Russia Ukraine War LIVE: ரஷ்ய தாக்குதலில் மேலும் 40 பேர் வீரர்கள், பொதுமக்கள் 10 பேர் உயிரிழப்பு - உக்ரைன்

ரஷ்ய தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மேலும் 40 வீரர்களும், பொதுமக்களில் 10 பேரும் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Russia Ukraine War LIVE: உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவுக்கு தக்க பதிலடி தரப்படும் - அமெரிக்கா

உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவுக்கு தக்க பதிலடி தரப்படும் - அமெரிக்கா

Russia Ukraine War LIVE: உக்ரைனில் இணையத் தாக்குதல்

தகவல் தொடர்பைத் துண்டிக்கும் வகையில்,  உக்ரைனில் இணையத் தொடர்புகளைத் துண்டிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது ரஷ்யா. தூதரக ரீதியிலான உறவை உக்ரைனுடன் துண்டித்துக்கொண்டது ரஷ்யா

Russia Ukraine War LIVE: இணையத் தொடர்பை துண்டிக்கும் வகையில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்

இணையத் தொடர்பை துண்டிக்கும் வகையில், உக்ரைன் மீது ரஷ்யா  தாக்குதல்

ரஷ்யாவை சேர்ந்த 50 பேர் உயிரிழப்பு - உக்ரைன் அரசு தகவல்

தங்களின் தாக்குதலில் ரஷ்யாவைச் சேர்ந்த 50 ஆக்கிரமிப்பாளர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு தகவல் கூறியுள்ளது.

ஹிட்லரும் புடினும் சேர்ந்திருக்கும் கார்டூனை பதிவு செய்தது, உக்ரைனின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளம்..

இந்தியர்களை அழைத்து வர மாற்று வழி என்ன?

இந்தியர்களை அழைத்து வருவதற்கான மாற்று வழி என்ன என்பதைக்குறித்து மத்திய அரசு ஆலோசனை.

ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளோம். எங்களுக்கு உதவுங்கள் - உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்கள்

ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளோம். எங்களுக்கு உதவுங்கள் - உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்கள்

வெளியில் செல்ல வழியின்றி தவிக்கிறோம் - இந்திய மாணவர்கள்

ரயில் நிலையம் ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளோம். வெளியில் செல்ல வழியின்றி தவிக்கிறோம் - இந்திய மாணவர்கள்

இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை

உக்ரைனைச் சுற்றியுள்ள அண்டை நாடுகளான போலந்து, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை.

உக்ரைன் மக்களுக்கு தஞ்சம் தர மாட்டோம் - மால்டோவா

உக்ரைன் நாட்டு மக்களுக்கு தஞ்சம் தர மாட்டோம் என்று அண்டை நாடான மால்டோவா அறிவித்துள்ளது. இது உக்ரைன் மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

உக்ரைன் அதிபருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சு...!

ரஷ்யாவின் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலுக்கு ஆளாகி வரும் உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

ஏ.டி.எம்.கள், பெட்ரோல் பங்கில் குவிந்த உக்ரைன் மக்கள்...!

ரஷ்யாவின் தாக்குதலினால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள உக்ரைன் மக்கள் ஏ.டி.எம்.களிலும், பெட்ரோல் பங்கிலும் பணத்திற்காகவும், வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காகவும் குவிந்துள்ளனர். 

உக்ரைன் வீரர்கள் சரணடைந்து வருகின்றனர் : ரஷ்யா தகவல்

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரில் கடும் சேதங்களை உக்ரைன் சந்தித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாத உக்ரைன் வீரர்கள் ரஷ்ய ராணுவத்திடம் சரணடைந்து வருகின்றனர். 

உக்ரைனில் உணவில்லாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள்...!

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் தங்களிடம் போதியளவில் உணவுப்பொருட்கள் கையிருப்பில் இல்லை என்றும், கையிருப்பில் உள்ள உணவுகள் ஓரிரு நாட்கள் மட்டுமே இருக்கும் என்றும் வேதனை தெரிவித்துள்ளனர். 

உக்ரைனில் ரயில், விமானம் மற்றும் பேருந்து சேவைகள் முடக்கம் - தமிழக மாணவர்கள் வேதனை

உக்ரைனில் ரயில், விமானம் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவை முடக்கப்பட்டுள்ளதாக அங்கு சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

உக்ரைனில் ரயில், விமானம் மற்றும் பேருந்து சேவைகள் முடக்கம் - தமிழக மாணவர்கள் வேதனை

உக்ரைனில் ரயில், விமானம் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவை முடக்கப்பட்டுள்ளதாக அங்கு சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

ரஷ்யாவின் தாக்குதலில் 7 பொதுமக்கள் உயிரிழப்பு...!

ராணுவ தளவாடங்களை மட்டுமே தாக்குவதாக கூறிய ரஷ்யாவின் தாக்குதலில் 7 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததாக உக்ரைன் கூறியுள்ளது.

Russia Ukraine War LIVE: உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்கள் - வைரலாகும் வீடியோ...!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் உச்சம் அடைந்துள்ள நிலையில், இந்திய மாணவர்கள் தாய்நாடு திரும்புவதற்காக காத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Russia Ukraine War LIVE: உக்ரைனுக்கு எதிரான போரை உடனே நிறுத்த வேண்டும் - ஜெர்மனி வேண்டுகோள்

உக்ரைனுக்கு எதிரான தாக்குதலை உடனடியாக ரஷ்யா கைவிட வேண்டும் என்று ஜெர்மனி வேண்டுகோள் விடுத்துள்ளது. 

Russia Ukraine War LIVE: ரஷ்யாவின் தாக்குதலில் இதுவரை 100 உக்ரைன் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் இதுவரை நூற்றுக்கணக்கான உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. 

Russia Ukraine War LIVE: உக்ரைனில் அமலுக்கு வந்தது ராணுவச்சட்டம்...!

உக்ரைன் நாட்டில் ராணுவச்சட்டம் அமலுக்கு வருவதாக அந்தநாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். 

Russia Ukraine War LIVE Updates: உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கான சிறப்பு உதவி எண்கள் அறிவிப்பு..!

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்ப இருக்க வேண்டும் என்று இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்காக சிறப்பு உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறையை 1800118797 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். மேலும், 91 11 23012113, 91 11 23014104, 91 11 23017905 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்று வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

உக்ரைன் மீதான போரால் இந்தியாவுடனான உறவு பாதிக்கப்படாது - ரஷ்யா கருத்து

உக்ரைன் மீதான போர் பதற்றத்தால் இந்தியா உடனான உறவு பாதிக்கப்படாது என்று ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது. 

ரஷ்யாவிற்கு உரிய பதிலடி கொடுப்போம் - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்..!

உக்ரைன் மீது போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிற்கு உரிய பதிலடி தரப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். 

ரஷ்யாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்..!

உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவின் 5 போர் விமானங்களையும், ஹெலிகாப்டரையும் லூகான்ஸ்க் நகரில் உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. 

சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் உலகப்போர் 3 ஹேஷ்டேக்...!

ரஷ்யா ராணுவம் உக்ரைன் மீது போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் உலகப்போர் 3 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. 

ரஷ்யா - உக்ரைன் போரால் மிகப்பெரிய சிக்கல் உருவாகும் - ஐ.நா.வில் இந்திய தூதர்..!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் மிகப்பெரிய சிக்கல் உருவாகும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்திய தூதர் திருமூர்த்தி எச்சரிக்கை  விடுத்துள்ளார். 

ரஷ்ய போர் விமானத்தை சுட்டுவீழ்த்திய உக்ரைன்..!

உக்ரைன் மீது ரஷ்யா தீவிரமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்ய போர் விமானத்தை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. 

மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் தஞ்சம் அடையும் உக்ரைன் மக்கள்...!

ரஷ்ய படைகள் உக்ரைன் மீது விடாமல் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருவதால், அந்த நாட்டு மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள உக்ரைனில் உள்ள மெட்ரோ சுரங்கப்பாதையில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

இந்திய பிரதமர் மோடி தலையிட வேண்டும் - உக்ரைன் தூதரகம் வேண்டுகோள்...!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்ய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசி உதவி செய்ய வேண்டும் என்று இந்தியாவில் உள்ள உக்ரைன் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

உக்ரைன் இணையதளங்களை ஹேக் செய்த ரஷ்யா..! சைபர் அட்டாக்கையும் தொடங்கிய ரஷ்யா...!

உக்ரைன் மீது ராணுவ தாக்குதலை தொடங்கியுள்ள ரஷ்யா அந்த நாட்டின் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளின் இணையதளங்களை ஹேக் செய்து முடக்கியுள்ளது. இதனால், உக்ரைன் முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

மக்கள் பதட்டமடைய வேண்டாம்; பாதுகாப்பாக இருங்கள் - உக்ரைன் அதிபர் வேண்டுகோள்

ராணுவம் தனது வேலைகளை செய்து வருவதால் நாட்டு மக்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம் என்றும், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் உக்ரைன் நாட்டு அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைன் மக்கள் பதற்றமடைய வேண்டாம் - உக்ரைன் அதிபர்

ராணுவம் தனது வேலையை செய்து வருவதால் நாட்டு மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் என்றும், அதேசமயத்தில் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் அந்த நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Russia Ukraine War LIVE: உக்ரைனின் ராணுவ தளவாடங்கள் மீது மட்டும் தாக்குதல்...! ரஷ்யா அறிவிப்பு

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல்நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் உள்ள ராணுவ தளங்கள் மீது மட்டும்தான் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக ரஷ்யா விளக்கமளித்துள்ளது. 

Russia Ukraine War LIVE: ரஷ்யாவின் பாதையில் யார் குறுக்கே வந்தாலும் அழிவு உறுதி...! புதின் எச்சரிக்கை..!

ரஷ்யாவின் பாதையில் யார் குறுக்கே வந்தாலும் வரலாறு காணாத அழிவு உறுதி என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Russia Ukraine War LIVE: ரஷ்யாவின் குறுக்கே யார் வந்தாலும் அழிவுதான் - புதின் எச்சரிக்கை

ரஷ்யாவின் குறுக்கே யார் வந்தாலும் அவர்கள் வரலாறு காணாத வகையில் அழிவைச் சந்திப்பார்கள் என்று ரஷ்ய அதிபர் புதின் மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Russia Ukraine War LIVE Updates: உக்ரைன் மீது வெடிகுண்டுகளை வீசி வரும் ரஷ்யா..!

உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது கிளஸ்டர்பாம் எனப்படும் கொத்து வகை குண்டுகள் உள்பட வெடிகுண்டுகளை வீசி வருகிறது. 

Russia Ukraine War LIVE: ரஷ்யாவிற்கு தக்க பதிலடி கொடுப்போம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் 'நியாயமற்ற' தாக்குதலுக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ரஷ்யாவிற்கு தக்க பதிலடி கொடுப்போம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் 'நியாயமற்ற' தாக்குதலுக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ரஷ்யா - உக்ரைன் போரால் ரூ.864 உயர்ந்த தங்கம் விலை...!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கிய காரணத்தால் இந்தியாவில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூபாய் 864 உயர்ந்துள்ளது. 

உக்ரைன் நாட்டில் சிக்கிய தமிழர்களை மீட்க சிறப்பு உதவி எண்கள்...!

உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்காகவும், அவர்களுக்கு உதவுவதற்காகவும் தமிழ்நாடு அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 044 - 2851 5288, 96000 23645 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், nrtamil.tv.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் 

உக்ரைன் நாட்டில் சிக்கிய தமிழர்களை மீட்க சிறப்பு உதவி எண்கள்...!

உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்காகவும், அவர்களுக்கு உதவுவதற்காகவும் தமிழ்நாடு அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 044 - 2851 5288, 96000 23645 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை - தமிழக அரசு அறிவிப்பு..!

உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்காக அயலக தமிழர் மற்றும் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

உக்ரைன் நாட்டின் உள்ளே நுழைந்த ரஷ்யராணுவம்...!

உக்ரைன் நாட்டின் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ள ரஷ்ய ராணுவத்தினர் தற்போது உக்ரைன் நாட்டின் முக்கிய நகருக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். 

உக்ரைன் மீது போர்..! ரஷ்யாவிற்கு அமெரிக்கா கடும் கண்டனம்..!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

உக்ரைன் மீது ரஷ்ய போரால் விறுவிறுவென்று உயர்ந்தது கச்சா எண்ணெய் விலை...!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியுள்ளதால் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி,  கச்சா எண்ணெய் விலை 100 டாலரை கடந்துள்ளது. 

உக்ரைனில் விமான நிலையங்களை கைப்பற்ற ரஷ்யா முயற்சி

உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்ற ரஷ்யா படைகள் முயற்சி செய்து வருகின்றன. ரஷ்ய விமானப்படை இன்னும் சில மணிநேரங்களில் விமான நிலையங்களை கைப்பற்றும் என்பதால் அச்சம் நிலவி வருகிறது.

Background

ரஷ்யா - உக்ரைன் விவகாரம் உலக நாடுகள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். இதையடுத்து, உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவில் - நகரத்தில் ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.