Breaking News LIVE 18th DEC 2024: திண்டிவனம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்தது - 20 பேர் காயம்
Breaking News LIVE 18th Dec 2024: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.
சுகுமாறன்
Last Updated:
18 Dec 2024 07:15 AM
திண்டிவனம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்தது - 20 பேர் காயம்
திண்டிவனம் அருகே ஜக்கம்பேட்டையில் ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 20 பக்தர்கள் காயம் அடைந்தனர்.
சென்னையிலே காலையிலே திடீரென பெய்த மழை
சென்னையில் காலையிலே பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அம்பாசமுத்திரம் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு
அம்பாசமுத்திரம் அருகே பெட்ரோல் குண்டு வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Background
- சென்னை. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
- விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
- விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று வெளுத்து வாங்கிய கனமழை
- தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி வரை மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்
- சென்னை துறைமுகத்தில் கடலில் விழுந்த கார்; கண்ணாடியை உடைத்து வெளியே தப்பிய கடற்படை அதிகாரி
- கேரள கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படும் அவலம்; தமிழக – கேரள எல்லையில் தீவிர சோதனை
- இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி; ரூபாய் 4.92 லட்சம் கோடி இழப்பு
- டங்ஸ்டன் சுரங்க விவகாரம்; மதுரை அரிட்டாபட்டி கிராம பொதுமக்கள் போராட்டம்
- ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மக்களவையில் கடும் எதிர்ப்பு; நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு மசோதா அனுப்பப்பட்டது
- ஒரு அவைக்குள் ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு நாடு முழுவதும் ஒரே மாதிரி தேர்தலை நடத்தப்போகிறதா? சு.வெங்கடேசன் எம்பி
- ஒரே நாடு ஒரே தேர்தல் எந்த வகையில் மாநில உரிமையை பறிக்கிறது? அண்ணாமலை கனிமொழிக்கு கேள்வி
- சர்ச்சைப் பேச்சு விவகாரம்; அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி கொலிஜியம் முன்பு விளக்கம்
- வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் கடும் குளிரால் பாதிப்பு
- குரூப் 2 முதன்மை தேர்வுக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இன்று கடைசி நாள்
- பள்ளி சத்துணவில் தரமற்ற முட்டைகள்; சமூக நலத்துறை மீது தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
- உத்தரபிரதேசத்தில் காங்கிரசின் போராட்டத்தைத் தடுக்க சாலையில் தடுப்புகள் அமைப்பு
- தேசிய தேர்வு முகமை உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வில் மட்டுமே கவனம் செலுத்தும் – மத்திய கல்வி அமைச்சர்
- கோவை சிறுமுகை அருகே காட்டுக்குள் உலா வரும் யானையால் பொதுமக்கள் அச்சம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -