WTC 2025 Points Table Updated: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில்ஏற்பட்டுள்ள மாற்றம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - சரிந்த இந்தியா
நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இரண்டாவது டிராவை எதிர்கொண்டுள்ள இந்திய அணி, கூடுதலாக 4 புள்ளிகளை பெற்று 114 புள்ளிகளை எட்டினாலும், இந்தியாவின் புள்ளிகள் சதவிகிதம் 57.29 இலிருந்து 55.88 ஆக சரிந்தது. ஆஸ்திரேலியாவும் இந்த சுழற்சியின் இரண்டாவது டிராவுடன், புள்ளிகள் சதவீதம் 60.71 இலிருந்து 58.88 ஆக சுருக்கியது. லார்ட்ஸில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள, WTC இறுதிப் போட்டியில் தங்களுடைய இடத்தை உறுதிப்படுத்த ஒரு வெற்றி தூரத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்காவிற்கு (63.33) பின்னால், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்தில் தொடர்கிறது. புள்ளிப்பட்டியலில் இந்திய அணி மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்
நிலை | அணிகள் | போட்டி | வெற்றி | தோல்வி | டிரா | புள்ளிகள் | PCT |
1 | தென்னாப்பிரிக்கா | 10 | 6 | 3 | 1 | 76 | 63.33 |
2 | ஆஸ்திரேலியா | 15 | 9 | 4 | 2 | 106 | 58.89 |
3 | இந்தியா | 17 | 9 | 6 | 2 | 114 | 55.88 |
4 | நியூசிலாந்து | 14 | 7 | 7 | 0 | 81 | 48.21 |
5 | இலங்கை | 11 | 5 | 6 | 0 | 60 | 45.45 |
6 | இங்கிலாந்து | 22 | 11 | 10 | 1 | 114 | 43.18 |
7 | பாகிஸ்தான் | 10 | 4 | 6 | 0 | 40 | 33.33 |
8 | வங்கதேசம் | 12 | 4 | 8 | 0 | 45 | 31.25 |
9 | மேற்கிந்திய தீவுகள் | 11 | 2 | 7 | 2 | 32 | 24.24 |
மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள்:
ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக, இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், மழையின் குறுக்கீடு காரணமாக பிரிஸ்பேனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இதையடுத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, வரும் 26ம் தேதி மெல்போர்னில் தொடங்க உள்ளது.
அடுத்த ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் பங்கேற்க இந்திய அணி முதலில் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.