22 வருடங்களுக்குப் பின் அரியவகை உயிரினமான பிங்க் நிற நடக்கும் மீன் டாஸ்மேனியா கடற்கரையோரம் காணக்கிடைத்திருக்கிறது. காமன் வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வுக் கழகம் (Commonwealth Scientific and Industrial Research Organisation (CSIRO) ஆஸ்திரேலியாவின் அறிவியல் ஆராய்ச்சி அமைப்பு. அது இந்த அறிவிப்பை உறுதி செய்திருக்கிறது. இந்த அரியவகை மீன் கடல் பூங்காவில் காணக்கிடைத்திருக்கிறது.

CSIRO கொடுத்திருக்கும் தகவலின் படி இந்த மீன்கள் ஒரு காலத்தில் டாஸ்மேனியாவின் தெற்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் நிறைந்து வாழ்ந்து வந்திருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக இவற்றின் எண்ணிக்கை குறைந்து வந்தது. கடந்த 2012-இல் இது அழிந்து வரும் ஆபத்தான நிலையில் இருக்கும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..

இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..

இப்படியான பின்கதையை கொண்டிருக்கும் இந்த ஸ்பெஷலான மீன் 22 வருடங்களின் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் முயற்சிக்குப் பிறகு மறுபடியும் காணக் கிடைத்திருக்கிறது.

கடந்த பிப்ரவரியில் கடல் ஆராச்சியாளர்கள் டாஸ்மேனியாவின் பிளவுண்ட கடல் பூங்காவின் கடற்பரப்புக்கு அடியே நீருக்குள் இயங்கும் புகைப்படக் கருவியைக் கொண்டு சில காணொளிகளைப் பதிவு செய்துள்ளனர். அந்த காட்சிகளைப் பார்க்கும்போது இந்த பிங்க் நிற மீன்கள், தங்களது சிறிய கரங்களுடன் அடியில் வாழ்ந்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த பிளவுண்ட கடல் பூங்காவில் பூமியின் மேல் ஓடு பிளவுண்டு இருக்கிறது, அதனால் 4000 அடிகளுக்கும் கீழ்நோக்கி சென்று ஆய்வு மேற்கொள்ள முடியும்.

இந்த நடக்கும் மீனிற்குக் கரங்கள் போல தோற்றமளிக்கும் சிறு உறுப்புகள் உண்டு. அவற்றைக் கொண்டு இவை கடற்பரப்பில் நடப்பது போன்ற அசைவை மேற்கொள்ளும். அதனால் தான் இவை நடக்கும் மீன்கள் என்று அறியப்படுகின்றன. இதன் இருப்பும் வாழ்வியலும் சூழல் ரீதியில் ஆபத்தில் இருப்பதால் இவை அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

 

Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?

Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்