லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், அவருக்கு மிகவும் பிடித்த அரண்மனைகளில் ஒன்றான விண்ட்சர் அரண்மனை வளாகத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.


ராணிக்கு அஞ்சலி


ராணியின் கணவர் பிலிப், தந்தை ஜார்ஜ் VI, தாய் எலிசபெத் ஏஞ்சலா, சகோதரி மார்கரெட் ஆகியோர் உடல்களும் இதே இடத்தில் தான் அடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு அருகே இரண்டாம் எலிசபெத்தின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, இறுதி ஊர்வலத்தில் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது சகோதரர், சகோதரி மகன்கள் ஆகியோர் ராணுவ வீரர்களுடன் இணைந்து அணிவகுத்துச் சென்றனர். அந்த நேரத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ் தாயை பிரியும் தருணத்தில் அஞ்சலி செலுத்தினார்.



ராணி உடல் நல்லடக்கம்


ராணி எலிசபெத்தின் சவப்பெட்டி கிரெனேடியர் காவலர்களால் எடுத்துச் செல்லப்பட்டு, தேவாலயத்தின் முன்புறம் உள்ள கேடஃபால்க்கில் வைக்கப்பட்டது. இந்த பழைய பண்பாட்டின் பின்னணியில் உள்ள முக்கியத்துவம் காண்போரை ஆச்சரியப்படுத்தியது. விண்ட்சரின் டீன் மற்றும் கேன்டர்பரியின் பேராயர் தலைமையிலான தொடர்ச்சியான பாடல்கள் மற்றும் பிரார்த்தனைகளைத் தொடர்ந்து, அவரது சவப்பெட்டி மெதுவாக தேவாலயத்திற்கு கீழே உள்ள ராயல் வால்ட்டில் இறக்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்: மன்னிப்பு கேட்கத்தயாரா இருக்கேன்.. ஆனா எதுக்குடா மன்னிப்பு கேட்கணும்? - கொந்தளித்த ஆ.ராசா


குச்சியை உடைக்கும் சடங்கு


அதனை தொடர்ந்து லார்ட் சேம்பர்லைன் (லார்ட் ஆண்ட்ரூ பார்க்கர்) அவரது அலுவலக மந்திரக்கோலை உடைத்து சவப்பெட்டியில் வைத்தார். 'தடியை உடைத்தல் (breaking of the stick)' என்று அழைக்கப்படும் இந்த சடங்கு, ஆட்சி செய்தவரின் சேவை முடிந்தது என்பதை குறிக்கிறது. தற்போது பதவியேற்றுலா மன்னர் சார்லஸ் தனக்கென ஒரு புதிய பொறுப்பாளரை நியமிப்பார், அதன்பிறகு அவர்கள் ஒரு புதிய அலுவலக மந்திரக்கோலைப் பெறுவார்கள்.



எதற்காக இந்த குச்சி?


இந்த மெல்லிய குச்சி முதலில் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது, இது மன்னரின் நீதிமன்றத்தில் மக்கள் அவமரியாதையாக நடந்து கொண்டால் அவர்கள் மீது லேசாக தட்டுவதன் மூலம் அவர்களை அடக்குவதற்கு லார்ட் சேம்பர்லெய்ன் பயன்படுத்தினார் என்று கூறப்படுகிறது. அதனை உடைத்து சவப்பெட்டி மீது வைப்பது அவர் சேவை நிறைவடைந்ததை குறிக்கிறது. 1952இல் ராணி எலிசபெத் பதவியேற்றதில் இருந்து 70 வருடங்கள் கழித்து இந்த நடைமுறை தற்போதுதான் நடைபெறுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண