Queen Elizabeth death LIVE Updates: இங்கிலாந்து மகாராணி மறைவுக்கு மும்பை டப்பாவாலா அமைப்பு இரங்கல்!
இங்கிலாந்து நாட்டின் மகாராணி எலிசெபத் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பால் உயிரிழந்தார். அவரது மறைவால் மக்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.
King Charles III : ராணி எலிசபெத்தின் முடிசூட்டு விழா.. கன்னத்தில் கைவைத்து நின்ற கிங் சார்லஸ் III.. வைரலாகும் பழைய படம்..
இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் இறப்புக்கு மும்பை டப்பாவாலா அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.
முன்னதாகப் பேசிய மும்பை டப்பாவாலாக்களின் சங்கத் தலைவர் சுபாஷ் தலேகர், “இளவரசர் சார்லஸ் இந்தியா வந்தது முதல் மும்பை டப்பாவாலாக்கள் அமைப்பு பிரிட்டிஷ் அரச குடும்பத்துடன் மிக நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணம் குறித்து கேள்விப்பட்டதில் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். அனைத்து டப்பாவாலாக்களும் அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
"எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார்" இங்கிலாந்து மகாராணி 2 ம் எலிசபெத் மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் பால்மோரல் அரண்மனையில் ராணி இரண்டாம் எலிசபெத் இறந்ததைத் தொடர்ந்து பிரிட்டிஷ் அரசாங்கத்தின் "ஆபரேஷன் யூனிகார்ன்" படி அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ராணியின் மரணம் மற்றும் இறுதிச் சடங்கிற்கு இடையேயான முதல் 10 நாட்களில் நிகழ்வுகளை நிர்வகிக்க இங்கிலாந்து அதிகாரிகள் ”ஆபரேஷன் பிரிட்ஜ்” என பெயர் வைத்திருந்தனர். ஆனால், இங்கிலாந்து ராணி ஸ்காட்லாந்தில் இறந்ததால் தற்போது ”ஆபரேஷன் யூனிகார்ன்” பெயரை மாற்றியுள்ளனர்.
தாய் மரணத்துக்கு மன்னர் மூன்றாவது சார்லஸ் இரங்கல் தெரிவித்து முன்னதாக வெளியிட்ட அறிக்கையில், ”எனது அன்பிற்குரிய தாய் மாட்சிமை மிக்க மகாராணி உயிரிழந்தது எனக்கும் குடும்பத்தாருக்கும் மிகப்பெரும் சோகமான தருணம். அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்
எலிசபெத் மகாராணி மறைவைத் தொடர்ந்து இளவரசர் சார்லஸ் புதிய மன்னரானார். மூன்றாவது சார்லஸ் என இனி அவர் அழைக்கப்படுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எலிசபெத் மறைவுக்கு 10 நாள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளதால், அதன்பிறகு பிரிட்டன் மன்னராக இளவரசர் சார்லஸ் பதவியேற்க உள்ளார்.
மகாராணி எலிசபெத் பிரிட்டன் தவிர்த்து கனடா, ஜமைக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 14 நாடுகளுக்குத் தலைவராக விளங்கியுள்ளார்.
பிரிட்டன் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்று சில நாடுகள் ராணி எலிசபெத்தை சம்பிரதாய அளவில் நாட்டின் தலைவராக ஏற்றுக் கொண்டன.
ஒருவர் இறக்கும் தருணத்தில் வானவில் தோன்றினால் அவர் சொர்க்கத்தை அடைவார் என்பது அந்நாட்டு மக்களின் நம்பிக்கையாக விளங்கும் நிலையில் ராணி எலிசெபெத் இறக்கும் தறுவாயில் வானவில் தோன்றியது இங்கிலாந்து மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று எலிசபெத் மகாராணி உயிரிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் பக்கிங்ஹாம் அரண்மனை பகுதியில் இரட்டை வானவில் தோன்றியது இங்கிலாந்து மக்களை பெரும் உணர்ச்சிப்பெருக்கில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல் பால்மோரல் அரண்மனையிலும் வானவில் தோன்றியது.
பிரான்ஸ் நாட்டின் லூயிஸ் 16 கடந்த 1643ம் ஆண்டு முதல் செப்டம்பர் 1-ந் தேதி 1715ம் ஆண்டு வரை 72 ஆண்டுகள் வரை ஆட்சிபுரிந்த பெருமைக்கு சொந்தக்காரர், அவருக்கு அடுத்தபடி மகாராணி எலிசபெத் நீண்ட காலம் ஆட்சி செய்த பெருமைக்கு சொந்தக்காரர்.
எலிசபெத் மறைவிற்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உலகின் நீண்டகாலம் ராணியாக ஆட்சி செய்த பெருமைக்குரிய இரண்டாவது நபர் என்ற பெருமைக்கு ராணி எலிசபெத் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து நாட்டின் மகாராணி எலிசெபத் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பால் உயிரிழந்தார்
Background
இங்கிலாந்து நாட்டின் மகாராணி எலிசபெத் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இன்று அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் இன்று உயிரிழந்தது மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவால் இங்கிலாந்து நாட்டு மக்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர். அவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உலகின் நீண்டகாலம் ராணியாக ஆட்சி செய்த பெருமைக்குரிய இரண்டாவது நபர் என்ற பெருமைக்கு ராணி எலிசபெத் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் நாட்டின் லூயிஸ் 16 கடந்த 1643ம் ஆண்டு முதல் செப்டம்பர் 1-ந் தேதி 1715ம் ஆண்டு வரை 72 ஆண்டுகள் வரை ஆட்சிபுரிந்த பெருமைக்கு சொந்தக்காரர், அவருக்கு அடுத்தபடி மகாராணி எலிசபெத் நீண்ட காலம் ஆட்சி செய்த பெருமைக்கு சொந்தக்காரர்.
மகாராணி எலிசபெத் மறைவைத் தொடர்ந்து மன்னர் குடும்பத்தினர் அனைவரும் பால்மோரல் அரண்மைக்கு விரைந்துள்ளனர். ராணி மறைந்த காரணத்தால் இளவரசர் சார்லஸ் புதிய மன்னராக பொறுப்பேற்க உள்ளார். உயிரிழந்த மகாராணி எலிசபெத் உலகிலேயே நீண்ட காலம் ஆட்சி செய்த இரண்டாவது நபர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். அவரது இயற்பெயர் எலிசபெத் அலெக்சாண்ட்ரா மேரி ஆகும்.
விக்டோிய மகாராணி 63 ஆண்டுகள் ராணியாக அலங்கரித்த ராணி மகுடத்தை, ராணி எலிசபெத் 70 ஆண்டுகள் அலங்கரித்துள்ளார். அவர் கடந்த 1947ம் ஆண்டு மறைந்த மன்னர் பிலிப்பை திருமணம் செய்து கொண்டார். புகழ்பெற்ற பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் முதல் தற்போதைய இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் வரை சுமார் 15 இங்கிலாந்து பிரதமர்களை மகாராணி எலிசபெத் நியமித்துள்ளார்.
96 வயதான மகாராணி எலிசபெத் இங்கிலாந்து மகாராணி என்று பெரும்பாலானோரால் அறியப்பட்டாலும், அரசியல் சாசனப்படி 16 நாடுகளுக்கு அவர்தான் மகாராணியாக உள்ளார். இங்கிலாந்து நாட்டின் மகாராணியாக 1952ம் ஆண்டு பிப்ரவரி 6-ந் தேதி இங்கிலாந்து நாட்டின் மகாராணியாக எலிசபெத் முடிசூடிக்கொண்டார். மன்னர் பிலிப்பிற்கும் – மகாராணி எலிசபெத்திற்கும் நான்கு வாரிசுகள் உள்ளனர். இளவரசர் சார்லஸ், இளவரிச ஆன்னா. இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசர் எட்வர்ட் உள்ளனர்.
இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ் அரசு மரபுப்படி நேற்று ஸ்காட்லாந்து நாட்டில் மகாராணி எலிசபெத்தை நேரில் சந்தித்தார். வயது மூப்பு காரணமாக சமீபகாலமாகவே அரச கடமைகளை தனது குடும்பத்தினரிடம் பெரும்பாலும் ராணி ஒப்படைத்திருந்தார். மகாராணி எலிசபெத் மறைவிற்கு இந்திய பிரதமர் மோடி உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -