பிரபல கால்பந்து வீரர்களில் ஒருவர் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ. இவர் உலகிலேயே மிகவும் பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவர். இவர் தன்னுடைய காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸின் பிறந்தநாளுக்கு நேற்று செய்த சம்பவம் மிகவும் வைரலாகி வருகிறது.


தன்னுடைய காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸின் பிறந்தநாளுக்கு ஒரு புதிய சர்பிரைஸ் கொடுக்க கிறிஸ்டியானா ரொனால்டோ முடிவு செய்துள்ளார். இதற்காக துபாயில் உள்ள உலகின் நீளமாக கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் இவருடைய காதலியின் படம் வரும் வகையில் விளக்குகளை அமைத்துள்ளார். அதற்கு முன்பாக நின்று தன்னுடைய காதலியின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். 


 






இது தொடர்பான வீடியோவை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பலரும் ஆச்சரியத்துடன் வியந்து பார்த்து வருகின்றனர். மேலும் இந்த புர்ஜ் கலிஃபாவில் தன்னுடைய காதலியின் படத்துடன் விளக்குகளால் அலங்கரிக்க இவர் 50ஆயிரம் பவுண்ட் செலவு செய்துள்ளார். இந்திய மதிப்பில் இது 50 லட்சத்திற்கும் மேலும் இருக்கும். 


இந்த வீடியோவை பலரும் பார்த்து தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ தற்போது வரை 30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் படிக்க: ஏபி டிவில்லியர்ஸை ஃபாலோ பண்ணும் 'பேபி ஏபி'- வைரலாகும் ஆர்.சி.பி கனவு வீடியோ !