PM Modi Chennai Visit LIVE: விமான நிலையத்தில் பிரதமருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை
PM Modi Chennai Visit: பிரதமர் மோடியின் தமிழ்நாட்டு வருகையின் அடுத்தடுத்த அப்டேட்களை கீழே விரிவாக காணலாம்.
சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஏப்ரல் 17ஆம் தேதி சவுராஷ்டிரா - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பல்லாவரத்தில் ரூ.5,200 கோடி மதிப்பிலான திட்டங்கள் மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எல்.முருகன் பேசி வருகிறார்.
ரூ.5,200 கோடி மதிப்பிலான திட்டங்கள் மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை, பல்லாவரத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
பல்லாவரம் நலத்திட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வந்தபோது, திமுகவினர் 'பெரியார் வாழ்க' என்று முழக்கமிட்டனர். பதிலுக்கு பாஜகவினர், 'மோடி வாழ்க' என்று முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லாவரம் நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி, ஐஎன்எஸ் அடையாறில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் புறப்பட்டார்.
தமிழ்நாட்டையும், தமிழ் மொழி கலாச்சாரத்தையும், தமிழக மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன் என்று பிரதமர் மோடி பேசினார்.
சென்னை - கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயிலைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, விவேகானந்தர் இல்லத்திற்குச் சென்றார். அங்கு மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் கலந்து கொள்கிறார்.
சென்னை - கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயிலைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, காமராஜர் சாலை வழியாக விவேகானந்தர் இல்லத்தை நோக்கிப் புறப்பட்டுச் செல்கிறார்
வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் இருந்து காரில் சென்ட்ரல் ரயில்நிலையம் நோக்கி புறப்பட்டார் பிரதமர் மோடி
ரூபாய் 1260 கோடி மதிப்பிலான சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பிரதமர் மோடி தான் புதியதாக திறந்து வைக்க உள்ள விமான நிலையத்தின் புதிய முனையத்தை நேரில் பார்வையிட்டு வருகிறார்.
ஹைதரபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் மோடி. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Background
பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருகை தந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதற்காக 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 1.35 மணிக்கு ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையத்திலிருந்து விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் சென்னைக்கு 2.45 மணிக்கு வருகிறார். மாலை 3 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டிருக்கும் ஒருங்கிணைந்த புதிய முனையத்தை திறந்து வைக்கிறார். பின்னர் மாலை 3:30 மணிக்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மாலை 3: 50 மணிக்கு, சென்னை ஐஎன்எஸ் அடையாறு சென்றடைகிறார். மாலை 3:55 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு, மாலை 4 மணிக்கு செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செல்கிறார்.
அங்கிருந்து மாலை 6 மணிக்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மாலை 6:20 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் கிரவுண்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கிறார்.
ஏப்ரல் 9ஆம் தேதி ஞாயிறு காலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு பிரதமர் மோடி செல்கிறார். அதன் பின்பு காலை 9:45 மணிக்கு தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 10:20 மணிக்கு, கர்நாடக மாநிலம் மைசூர் யுனிவர்சிட்டி ஹெலிபேட் தளத்தில் சென்று இறங்குகிறார்.
சென்னைக்கு பிரதமர் மோடி வருவதையொட்டி டி.ஜி.பி சைலேந்திர பாபுவின் உத்தரவின் பேரில் 22ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியினரின் தொடர் போராட்டம் காரணமாக, இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தரப்பில் வெளியான தகவலின் பேரில் காங்கிரஸ் கட்சியினர் போலீசார் பாதுக்காப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
சென்னைக்கு பிரதமர் மோடி வருவதை ஒட்டி நேற்றைய தினம் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. எந்த இரு அசம்பாவிதமோ பாதுகாப்பு குறைபாடோ ஏற்படாமல் இருக்க சென்னை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -