அமெரிக்க நாட்டின் அதிபராக, மீண்டும் 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு கட்சி தலைவர் டொனால்டு டிரம்ப்புக்கு, தொலைபேசி வாயிலாக , பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடியை, அதிபர் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கவில்லை என பேச்சுகள் எழுந்த வந்த நிலையில், இந்த உரையாடல் உணர்த்துவது என்ன என்பது குறித்து பார்ப்போம்.

பிரதமர் மோடி- அதிபர் டிரம்ப்  தொலைபேசி உரையாடல்

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேசியது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, “ எனது அன்பு நண்பர் அதிபர் டிரம்புடன் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது முறையாக அதிபரக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கும் வாழ்த்துகள். இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர நன்மை மற்றும் நம்பகமான கூட்டாண்மைக்கு கடமைப்பட்டுள்ளோம். இரு நாட்டு மக்களின் நலனுக்காகவும், உலக அமைதி, வளம் மற்றும் பாதுகாப்பிற்காகவும் இணைந்து செயல்படுவோம்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பதவியேற்பு விழாவில் அழைக்கப்படாத மோடி:

கடந்த ஜனவரி 20 ஆம் தேதி, அமெரிக்கா நாட்டின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, துணை அதிபராக ஜே.டி வேன்ஸ் பதவியேற்றுக் கொண்டார். இவ்விழாவில், முன்னாள் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரீஸ் , பிற நாட்டுத் தலைவர்கள், பணக்காரர்கள் மற்றும் டிரம்ப் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்திய அரசு சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். மேலும், இந்தியாவின் டாப் பணக்காரரான ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியும், அவரது மனவி நீதா அம்பானியும் பங்கேற்றனர். 

அமெரிக்க நாட்டில் பழங்கால வழக்கமாக, அதிபர் பதவியேற்பு விழாவில் உலகத் தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படாது, அதிகாரிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படும். ஆனால், அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக, இம்முறை வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பானது விடுக்கப்பட்டது. இவ்விழாவில் ,  சீன அதிபர் , இத்தாலி பிரதமர் உள்ளிட்ட 8 உலகத் தலைவர்களுக்கு அழைப்பானது விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதில், டிரம்ப்பின் நெருங்கிய நண்பரான பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற தகவல் பேசுபொருளானது.

Also Read: Israel Hamas Ceasefire: டிரம்ப்பா- பைடனா.? இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு யார் காரணம் ?

உரையாடல் உணர்த்துவது என்ன?

இந்நிலையில், பிரதமரும் மோடி, அமெரிக்க அதிபர் இடையே உரையாடலில், இரு நாட்டு உறவுகள் குறித்து மட்டுமே இருந்திருக்க, அதிக வாய்ப்பு இருந்திருக்கும் எனவும் , இருவரிடையே தனிபட்ட நட்பு ரீதியலாக இருக்குமா என்றால் சந்தேகம் என்றுதான் என தோன்றுகிறது. 

ஏனென்றால், பழைய ரீதியிலான நட்பு தொடர்பு இருந்திருந்தால் , பதவியேற்பு விழாவுக்கு மோடி அழைக்கப்பட்டிருப்பார் என்றே பேசப்படுகிறது. 

இந்தியாவின் பொருளாதாரம் , அமெரிக்காவுக்கு தேவை என்ற காரணத்தால், இந்தியாவுடன் நட்புறவை அமெரிக்க அதிபர் புறந்தள்ள மாட்டார். ஆனால், மோடியுடன் பழைய நட்பு தொடராது என்றே கூறப்படுகிறது. 

அதற்கு முக்கிய காரணமாக, கடந்த முறை டிரம்புக்காக வாக்கு சேகரிக்கும் வகையில் ஹவுதி மோடி - நமஸ்தே டிரம்ப் விழா இருந்தது. ஆனால், இந்த முறை டிரம்புக்கு ஆதரவாக மோடி எதையும் மேற்கொள்ளவில்லை. அதற்கு காரணம், கடந்த முறை ஆதரித்து , தோற்றதால் பைடன் அரசுடன் சற்று சிக்கல்கள் இருந்தது. அதனால் இந்த முறை தவிர்த்தார் மோடி. 

கடந்த ஆண்டு , அமெரிக்காவில் குவாட் கூட்டம் நடைபெற்ற போது, டிரம்ப்பை, மோடி புறக்கணித்ததாக பேச்சுக்கள் எழுந்தன. 

இதையெல்லாம், டிரம்ப் மனதில் வைத்துதான், மோடியை சற்று தள்ளிவைப்பதாக பார்க்கப்படுகிறது.  இந்நிலையில், 2வது முறையாக அமெரிக்க அதிபராக டிரம்ப்பின் முதல் வெளிநாட்டு பயணமாக, அமெரிக்காவுக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரும் எதிரி நாடாக பார்க்கப்படும்  சீனாவுக்கும் , அதற்கடுத்துதான் இந்தியாவுக்கும் பயணம் செய்யவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.