Highest Paid CEO: 4 மாதங்கள்! 827 கோடி சம்பளம்... உலகின் பணக்கார CEO இவர் தான்
Highest Paid CEO : பிரையன் நிக்கோல் நான்கு மாதங்களுக்கு முன்பு ஸ்டார்பக்ஸ் கார்ப்பரேஷனில் சேர்ந்தார். இந்த நான்கு மாதங்களில் மட்டும் அவர் நிறுவனத்திடம் இருந்து $96 மில்லியன் பெற்றுள்ளார்.

ஆப்பிளின் தலைமை இயக்குனர் டீம் குக் மற்றும் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பெரும் சம்பளம் பெறுகின்றனர். அவரது ஆண்டு சம்பளம் சுமார் 75 மில்லியன் டாலர்கள். ஆனால் இவர்களின் சம்பளத்தின் உச்சத்தைத் தாண்டியவர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் ஸ்டார்பக்ஸின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியான பிரையன் நிக்கோல்.
பிரையன் நிக்கோல்:
பிரையன் நிகோல் நான்கு மாதங்களுக்கு முன்பு ஸ்டார்பக்ஸ் கார்ப்பரேஷனில் சேர்ந்தார். இந்த நான்கு மாதங்களில் மட்டும் அவர் நிறுவனத்திடமிருந்து $96 மில்லியன் (சுமார் ரூ. 827 கோடி) பெற்றுள்ளார், இதில் பங்கு விருதுகள், அவரது சுற்றுப்பயணங்கள் மற்றும் இதர செலவுகளும் அடங்கும். லைவ் மின்ட்டின் அறிக்கையின்படி, பிரையன் நிக்கோலின் வருடாந்திர வருமானம் $113 மில்லியன் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, பிரையன் நிக்கோலின் சம்பளத்தில் 94 சதவீதம் பங்குகளில் இருந்து வருகிறது. இதில் பெரும்பகுதி செயல்திறன் மற்றும் மூன்றாண்டுகளை நிறைவு செய்வதற்கான ஊக்கத்தொகையை அடிப்படையாகக் கொண்டது. ஸ்டார்பக்ஸ்-ல், நிக்கோல் கடந்த செப்டம்பர் 2024 இல் நிறுவனத்தில் இணைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. நிறுவனத்தில் சேர்ந்து ஒரு மாதம் முடிந்ததும், அவர் சேர்ந்தவுடன் கையொப்பமிட்ட போனஸாக ஐந்து மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டது.
ஜனவரி 24 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட தகவலில், நிக்கோலின் சம்பளத்தில் $1,43,000 அவரது வீட்டு செலவு என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள அவரது வீட்டிலிருந்து சியாட்டிலில் உள்ள ஸ்டார்பக்ஸ் தலைமையகத்துக்குச் செல்லும் விமானச் செலவுக்காக 72 ஆயிரம் டாலர்கள். 19 ஆயிரம் டாலர்கள் நிறுவனத்தின் விமானங்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான செலவாகும்.
இதையும் படிங்க: Trisha in TVK.?: 10 வருஷத்துல நான் CM...முன்பே சொன்ன த்ரிஷா... தவெக மூலம் நிறைவேறும் ஆசை.?
அதிக ஊதியம் பெறும் சிஇஓ:
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, பிரையன் நிகோல் அமெரிக்காவின் அதிக ஊதியம் பெறும் 20 CEO களில் ஒருவர். அவரது ஊதியம் சுமார் 113 மில்லியன் டாலர்கள். நிக்கோலுக்கு முன், ஸ்டார்பக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி லக்ஷ்மண் நரசிம்மன் இருந்த போது விற்பனை சரிந்ததால், உலகெங்கிலும் உள்ள ஸ்டார்பக்ஸ் மற்றும் அமெரிக்காவில் உள்ள தொழிற்சங்க தொழிலாளர் இயக்கத்திற்கு எதிரான புறக்கணிப்பு அழைப்புகளைச் சமாளிக்கத் தவறியதால் நீக்கப்பட்டார். நிக்கோலுக்கு பெரிய நிறுவனங்களை கையாண்ட அனுபவம் அதிகம் உள்ளதால் அவரின் வருகைக்கு பிறகு ஸ்டார் பக்ஸ் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.