Planents Conjuction : மார்ச் 28ம் தேதி செவ்வாய், புதன், வியாழன்,  வெள்ளி, யுரேனஸ்ஆகிய கோள்கள் ஒன்றாக பூமிக்கு மிக அருகில் தோன்றும் அரிய வானியல் நிகழ்வு நடைபெறவுள்ளது. 


நெருங்கும் கோள்கள் 


வானவியல் நிகழ்வுகளில் அவ்வப்போது சூரிய குடும்பத்தின் கோள்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் அதிசய நிகழ்வுகள் நடைபெறும். கடந்த ஆண்டில் செவ்வாய், வியாழன், சனி, புதன்,நெப்டியூன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்தித்த அரிய நிகழ்வு நடந்தது. 


அதேபோல் வானத்தில் பிரகாசமான கிரகங்களான வெள்ளி மற்றும் வியாழன், கடந்த பிப்ரவரி மாதத்தில், ஒவ்வொரு நாளும் ஒன்றையொன்று நெருங்கி வந்தனர்.  அதேபோன்று இந்த மாதம் மார்ச் 28ஆம் தேதி செவ்வாய், புதன், வியாழன்,  வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கோள்கள் ஒன்றாக பூமிக்கு மிக அருகில் தோன்றும் அரிய வானியல் நிகழ்வு நடைபெற உள்ளது.


இந்த நிகழ்வு அடுத்த வாரம் 28ஆம் தேதி நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அந்த நிகழ்வானது அதற்கு முன்தினம் மற்றும் அடுத்த நாளும் வானத்தில் தெரியக்கூடும் என்று கூறப்படுகிறது.


எப்போது?


இந்நிலையில், செவ்வாய், வியாழன், சனி, புதன்,நெப்டியூன் ஆகிய கிரகங்கள் வானத்தில் மிகவும் நெருக்கமாக தோன்றும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கோல்கள் மார்ச் 28ஆம் தேதி சூரிய  அஸ்தமனத்திற்கு பிறகு 50 டிகிரி பிரிவில் தோன்றும். இந்த நிகழ்வை conjunction என அழைக்கப்படும். 


நாசாவின் கூற்றுப்படி, conjunction என்பது இரண்டு கிரகங்கள், ஒரு கிரகம் மற்றும் சந்திரன், அல்லது ஒரு கிரகம் மற்றும் நட்சத்திரம் பூமியின் வானில் நெருக்கமாகத் தோன்றும். இது அவ்வப்போது நிகழும்.  கிரகங்கள் சூரியனை சுற்றி வரும் பாதையில் நேர்கோட்டில் வரும்போது இந்த நிகழ்வு நடைபெறுகிறது.  


வில் வடிவம்


மார்ச் 28ம் தேதி செவ்வாய், புதன், வியாழன்,  வெள்ளி, யுரேனஸ் ஆகிய கோள்கள் ஒன்றாக பூமிக்கு மிக அருகில் தோன்றும் அரிய வானியல் நிகழ்வு நடைபெற உள்ளதை அனைவரும் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதன், யுரேனஸை பார்ப்பது கடினமானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகியவை கண்ணுக்கு நன்றாக தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேர்கோட்டில் தெரியும் இந்த 5 கோள்களும் பூமியில் இருந்து பார்த்தால் கிட்டதட்ட ஒரு வில் வடிவத்தில் தெரியும். ஒரே நேர்கோட்டில் தெரியும் இந்த 5 கிரகங்களையும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.




மேலும் படிக்க


Pakisthan Earthquake: பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 9 பேர் பரிதாப உயிரிழப்பு - அச்சத்தில் மக்கள்


Rahul Gandhi Defamation Case: மோடி குறித்து அவதூறு பேச்சு.. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை...!