அவசரநிலையை கருத்தில் கொண்டு விமானி ஒருவர் சிறிய ஒற்றை எஞ்சின் விமானத்தை கார்கள் செல்லும் நான்கு வழிப்பாதையில் தரையிறக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.


அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தைச் சேர்ந்த வின்சென்ட் ஃப்ரேசர் எனும் இந்த விமானி ஜூலை 3ஆம் தேதி அன்று வடக்கு கரோலினாவின் பரபரப்பான சாலையில் அவசர சூழல் கருதி தான் ஓட்டிய விமானத்தை தரையிறக்கியுள்ளார்.


இந்த விமானம் பறந்துகொண்டிருந்தபோது திடீரென எஞ்சினில் கோளாறு ஏற்பட்டு விமானம் தடுமாறத் தொடங்கிய நிலையில், ஃப்ரேசர் விமானத்தை நான்குவழிப் பாதையில் பயணிக்கும் கார்களுக்கு மத்தியில் தரையிறக்கியுள்ளார்.


 






கார்கள் பயணித்த இந்த சாலையில் எந்த காரின் மீதும் உரசாமல் ஒரு நிபுணரைப் போல விமானத்தை தரையிறக்கிய இந்த விமானிக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


இந்த விமானத்தில் ஃப்ரேசருடன் அவரது மாமனாரும் பயணித்த நிலையில், முதலில் விமானத்தை அங்கிருந்த ஆறு ஒன்றில் தரையிறக்க தான் முயன்றதாக ஃப்ரேசர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், விமானத்தின் காக்பிட் எனப்படும் கட்டுப்பாட்டு பகுதியில் வைக்கப்பட்டிருந்த ’கோ ப்ரோ’ கேமரா இந்த எமர்ஜென்சி லேண்டிங் முழுவதையும் படம்பிடித்துள்ளது. தற்போது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ லைக்குகளை வாரிக்குவித்து வருகிறது.




மேலும் படிக்க : IND vs ENG 2nd ODI: காயத்தில் இருந்து மீண்ட கோலி..! ஆடும் லெவனில் மீண்டும் வந்ததால் ரசிகர்கள் உற்சாகம்..!


மேலும் படிக்க : IND vs WI T20 Squad: கோலி, பும்ரா இல்லை: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.