பெற்றோர்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளுக்கு தங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சி செய்கிறார்கள். அவர்கள் விரும்பும் அனைத்தையும் அவர்களுக்கு வாங்கித்தந்து, அவர்களை இன்னும் ஆச்சரியப்படுத்தத் திட்டமிடுகிறார்கள். சமீபத்தில் இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவும் அதையே காட்டுகிறது. இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர் @jordonflom பகிர்ந்த வீடியோவில், ஒரு சிறுமி தனது தந்தையின் புதிய ஃபோர்டு ப்ரோன்கோவுக்குள் அமர்ந்து அதனைப் பாராட்டுவதை நீங்கள் காணலாம். காருக்குள் இருக்கும் பல்வேறு விஷயங்களை அவள் பார்க்கிறாள். அவளது தந்தை தனக்கு அந்த வாகனத்தின் ஒரு சின்ன வடிவத்தைப் கிஃப்ட்டாகத் தர இருப்பது அவளுக்குத் தெரியவில்லை.
மேலும் ஒரு வீடியோவில் இரு பெற்றோரும் தங்கள் மகளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருப்பதாக கூறுவதைக் கேட்கலாம். அதைக் கேட்டதும் குதூகலமடைந்து தன் மினி காரைப் பார்க்க வருகிறாள். தந்தை பரிசை காண்பித்ததும், சிறுமி உற்சாகத்தில் கூச்சலிட்டுக்கொண்டு காரை ஓட்டினாள்.
இந்த வீடியோ சில வாரங்களுக்கு முன்பு பகிரப்பட்டது. பகிரப்பட்டதிலிருந்து, அது ஒரு லட்சத்திற்கும் அதிகமான முறை விரும்பப்பட்டது மற்றும் பலர் அதில் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்..
இன்ஸ்டாகிராம் கருத்துகளில் ஒருவர், "என்ன ஒரு அப்பா !!!!!!!அவள் முகத்தில் உள்ள புன்னகையும் சிரிப்பும் விலைமதிப்பற்றது. கடவுள் ஆசீர்வதிப்பார்." என கமெண்ட் செய்திருக்கிறார். இரண்டாவது நபர், "மிகவும் அழகாக இருக்கிறது, இறுதியில் அவரது உற்சாகம் அழகு" என்றார். மேலும் ஒருவர் "அது அவளுக்கு பிடித்தமான காராக இருக்கும். அப்பா எது செய்தாலும் இனி அவளுக்குப் பிடிக்கும்!!" என கமெண்ட் செய்திருந்தனர். பலர் இதய ஈமோஜிகளைப் பயன்படுத்தி கமெண்ட் செய்துள்ளனர்.