Pakistan Economic Crisis : கராச்சியில் ரேசன் பொருட்களை வாங்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடும் பஞ்சம்


பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் திணறி வரும் பாகிஸ்தான், வரும் மாதங்களில் மேலும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், பாகிஸ்தானின் தெற்கு நகரமான கராச்சியில் நேற்று தொண்டு நிறுவனத்தின் சார்பில் இலவச ரேசன் பொருட்கள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இதற்காக அப்பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இலவச ரேசன் பொருட்கள் விநியோகம் செய்து தொண்ட நிறுவனத்தின் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். 


விலை உயர்வு


பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கட்டி ஏற்பட்டு வரும் நிலையில், ஒரு வேளை உணவிற்கே நடுத்தர மற்றும் கீழ்தட்டில் இருக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படியே அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடு உயர்ந்து வருகிறது. அதன்படி, வெங்காயத்தின் விலை மட்டும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 228.28 சதவீதம் அதிகரித்துள்ளது.


இதேபோல் கோதுமை மாவின் விலை 120.66 சதவீதம் அதிகரித்துள்ளது, சிகரெட்டின் விலை 165.88 சதவீதம் அதிகரித்துள்ளது. லிப்டன் தேயிலையின் விலை 94.60 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஏரிவாயுவின் விலை 108.38 சதவீதம் அதிகரித்துள்ளது.


டீசல் விலை 102.84 சதவீதமும், பெட்ரோல் விலை 81.17 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து, பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதுமட்டுமின்றி, உயிர்காக்கும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இறக்குமதி தடுப்பூசிகள், மயக்க மருந்துகள் உள்ளிட்டவைகளுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது.


இதற்கிடையே, பாகிஸ்தானில் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. வாராந்திர பணவீக்கம் 45 சதவீதத்தை தொட்டுள்ளது. ஐந்த மாதங்களில் இரண்டாவது முறையாக பணவீக்கம் 45 சதவிதத்திற்கு மேல் உயர்ந்துள்ளதாக தெரிகிறது. இதனால்தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மருந்து தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. 




மேலும் படிக்க


ஹேப்பி நியூஸ் மக்களே.. சமையல் சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்தது.. எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரியுமா?