ஹேப்பி நியூஸ் மக்களே.. சமையல் சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்தது.. எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரியுமா?

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூ.76 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

Continues below advertisement

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூ.76 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

Continues below advertisement

மார்ச் மாதம் ரூ. 2,268ஆக இருந்த வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர், ஏப்ரல் மாதத்தில் ரூ.76 குறைந்து ரூ. 2,192 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சமையல் எரிவாயுவில் விலையில் மாற்றம் இல்லை. 

ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் சமையல் பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் எரிவாயு விலையும் உயர்த்தப்படுகிறது.

அந்த வகையில் கடந்த மாதம் மார்ச் 1ம் தேதி எட்டு மாதங்களுக்கு பின், வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு, உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலை நிலையாக இருந்தது. ஆனால், வணிக சிலிண்டர்களின் விலை மட்டுமே அவ்வபோது மாற்றமடைந்து கொண்டு இருந்தது. இதையடுத்து, சென்னையில் வணிக சிலிண்டர் விலை மார்ச் 1ஆம் தேதி ரூ.1917 லிருந்து ரூ. 2268ஆக உயர்த்தப்பட்டது.

ஏப்ரல் 1ம் தேதி முதல் வீட்டு சிலிண்டர் விலை

மார்ச் மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை அதிரடியாக 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. ஆனால் ஏப்ரல் மாதம் முதல் நாளில் 14.2 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டரில் எந்த விலை மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் ரூ. 1,118.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு கேஸ் சிலிண்டர் ரூ.76 குறைக்கப்பட்டுள்ளது. வணிக கேஸ் சிலிண்டர் இன்று முதல் சென்னையில் ரூ. 2,192 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

  • சென்னையில் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் ரூ. 1,118.50 க்கு விற்பனையாகி வருகிறது.
  • டெல்லியில் ரூ. 1,130க்கு விற்பனையாகி வருகிறது.
  • மும்பையில் ரூ.1,102க்கு விற்பனையாகிறது.
  • கொல்கத்தாவில் ரூ.1,129 ஆக விற்பனையாகிறது. 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola