சீனாவில் இறைச்சிக்காக கொலை செய்ய மரப்பெட்டிகளில் அடைத்து வைத்து எடுத்து செல்லப்பட்ட ஆயிரம் பூனைகளை போலீசார் மீட்டனர். 


கடத்தப்படும் பூனைகள்:


அசைவ உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சீனாவில் பாம்பு, தவளை, பன்றி, ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றை உண்பதால் அவற்றின் நுண்கிருமிகளால் மனிதர்களுக்கு வைரஸ் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இந்த நிலையில் பன்றி இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்வதற்காக ஆயிரக்கணக்கான பூனைகளை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஜங்ஜியாகங்க் பகுதியில் பூனைகள் இறைச்சிக்காக கொல்லப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் அங்குள்ள தெருக்களில் ஒருவாரமாக விலங்கு நல ஆர்வலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மரப்பெட்டியில் பூனைகள் அடைத்து வைத்து எடுத்து செல்லப்பட்டதை அறிந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 


பன்றி, ஆட்டு இறைச்சியுடன் கலப்படம்:


உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மரப்பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரம் பூனைகளை மீட்டனர். விசாரணையில், பூனைகள் இறைச்சிக்காக எடுத்து செல்லப்பட்டது தெரிய வந்தது. பூனைகளின் இறைச்சியை ஒருவாரம் வரை பதப்படுத்தினால், அது பற்றி இறைச்சியை போல் காணப்படும் என்பதும், அதை சந்தையில் பன்றி  மற்றும் ஆட்டு இறைச்சியுடன் கலந்து விற்பதும் தெரிய வந்துள்ளது. 


சந்தையில் பன்றி இறைச்சியுடன் சேர்த்து விற்கப்படும் ஒரு பவுண்டு பூனை இறைச்சியின் விலை ரூ.332 என்றும், ஒவ்வொரு பூனையும் பதப்படுத்திய பிறகு 4 முதல் 5 பவுண்டுகள் வரை எடை இருக்கும் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் அதிகளவில் பூனை இறைச்சிகள், பன்றி இறைச்சியுடன் கலந்து விற்கப்பட்டு வந்துள்ளது. 


இதற்கு முன்னதாக சீனாவில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் எலியின் தலை இருந்ததாக புகார்கள் எழுந்தன. சீனாவில் செல்லப்பிராணிகளை பாதுகாக்க சட்டங்கள் இருந்தாலும், விலங்கு வதை கொடுமையில் இருந்து பாதுகாக்கும் பொதுவான சட்டம் இல்லை என்பதால் இதுபோன்ற சம்பங்கள் அரங்கேறுகின்றன. 


மேலும் படிக்க: US Mass Shooting: அமெரிக்காவில் பயங்கரம்.. துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழப்பு.. மர்ம நப்ரின் புகைப்படம் வெளியீடு..


கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை - அதிர்ந்து போன மத்திய அரசு