Israel Hamas War: இரவோடு இரவாக தரைவழி தாக்குதல்.. இஸ்ரேலின் நடவடிக்கையால் சின்னாபின்னமாகும் ஹமாஸ்..

கடந்த 3 வாரங்களாக வான்வழி தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் நேற்று தரைவழி தாக்குதலை தொடங்கி ஹமாஸின் பல்வேறு இலக்குகளை தாக்கியது.

Continues below advertisement

இஸ்ரேலின் வான் வழி தாக்குதல் தீவிரமடைந்து வந்த நிலையில் நேற்று இரவோடு இரவாக சோதனை முறையில் தரை வழி தாக்குதலை தொடங்கியது.

Continues below advertisement

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினர் இடையே கடந்த 3 வாரமாக போர் நடந்து வருகிறது. முதலில் ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி வான்வழி தாக்குதலை தொடங்கியது. இதில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும் ஹமாஸ் நோக்கி தாக்குதலை தொடங்கியது. கடந்த மூன்று வாரங்களாக இஸ்ரேல் காசாவில் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. நாளுக்கு நாள் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. அங்கு இருக்கும் மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை காசாவில் நடந்த தாக்குதலில் 7 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குழந்தைகள் எனவும் காசா சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது. காசாவில் ஐ.நா அமைத்துள்ள முகாம்களில் சுமார் 6 லட்சம் பேர் தஞ்சமடைந்துள்ளதாகவும் போதிய இட வசதி இல்லாததால் பலரும் தெருக்களில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல எரிப்பொருள் பற்றாக்குறையால் காசாவில் இருக்கும் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை தவிர வேறு எந்த சிகிச்சையும் அளிக்கப்படுவதில்லை என காசா தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆனால் தற்போது காசாவில் எரிப்பொருள் முழுமையாக காலியாகிவிட்டது என்றும் இதனால் வேறு வழியின்றி அனைத்து மருத்துவ சேவைகளும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஐ.நா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வான் வழி தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல்  நேற்று இரவு தரை வழி தாக்குதலை தொடங்கியது.  இஸ்ரேலிய தரைப்படைகள் வடக்கு காசா பகுதிக்குள் சோதனை அடிப்படையில் நுழைந்து வெளியேறியது. படைகள் வெளியேறும் முன்  ஹமாஸ் இலக்குகளைத் கடுமையாக தாக்கியது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ வானொலி அறிவிப்பை வெளியிடுகையில், தற்போது நடைபெற்று வரும் போரின் மிகப்பெரிய ஊடுருவல் இதுவே ஆகும் என தெரிவித்துள்ளது.  இது தொடர்பான வீடியோவில் இஸ்ரேல் அதன் தரைவழி படைகளை காசாவில் நுழையும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

கடந்த சில நாட்களாக, இஸ்ரேல் வான்வழி தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், காசாவில் பல பகுதிகளை முற்றிலுமாக அழித்து, நிவாரணப் பணிகளுக்கு இடையூறு விளைவித்து, சுற்றுப்புறங்களை சீர்குலைத்து வருகின்றன.  

இது ஒருபுறம் இருக்க ஹமாஸ் அமைப்பினரால் சிறை பிடிக்கப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் இரு நாட்டினருக்கு இடையே நடைபெறும் போரை நிறுத்த வேண்டும் என்றும் ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஹமாஸை ஒழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola