குழந்தையைப் பிரசவிப்பது என்பது பெண்ணுக்கு மறு ஜென்மம் என்பார்கள். உண்மையிலேயே அப்படியொரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. எமிலி வேடல் என்ற பெண் தனக்கு பிரசவம் நடந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், "எமிலி வேடல் என்ற பெண் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு பிரசவ நாள் நெருங்கியிருந்தது. செப்டம்பர் 13 ஆம் தேதி அவர் வீட்டில் இருந்தார். மதியம் 2.20 மணியளவில் அவருக்கு பிரசவ வலி வந்தது. அப்போது அவர் உடனே தனது மகப்பேறு நல மருத்துவரை தொடர்பு கொண்டு பேசினார். மருத்துவர் நான் சொன்ன அறிகுறிகளைக் கேட்டுவிட்டு உடனே மருத்துவமனைக்கு வரச் சொன்னார். எனக்கு 5 நிமிடங்களுக்கு ஒருமுறை வலி வந்து சென்றது. உடனே நான் என் மகன் ஜேம்ஸை அவன் அறையில் படுக்கவைத்தேன். என் கணவர் ஸ்டீஃபனுக்கும் என் மாமியாருக்கும் தொலைபேசியில் அழைத்து உடனே வீட்டுக்கு வரச் சொன்னேன். அவர்கள் வந்து சேர்ந்தனர். அப்போது எனக்கு வலி இன்னமும் அதிகமாகி இருந்தது. உடனே என் கணவருடன் மருத்துவமனைக்குப் புறப்பட்டேன். ஆனால் கொஞ்சம் தூரம் செல்லச் செல்ல எனக்கு வலி அதிகமானது. நாங்கள் ஒரு டிரக்கில் சென்றோம்.
நான் பின்னால் படுத்திருந்தேன். எனக்கு என் குழந்தை வெளியே வருவதை உணர முடிந்தது. அதனால் நான் கணவரிடம் என்னைக் கீழே இறக்கி புல்வெளியில் கிடத்துங்கள் என்றேன். மைல் மார்க்கர் 13ல் நாங்கள் இருந்தோம். நான் மூச்சை அடக்கி முக்க முக்க குழந்தை வெளியே வரத் தொடங்கியது. ஸ்டீபனிடம் கவனமாக குழந்தையை கையில் எடுக்குமாறும் கூறினேன். குழந்தை வெளியே வந்தது. தொப்புள் கடியை வெட்டி என் கணவர் இரண்டு சார்ஜர் ஒயர்களைப் பயன்படுத்தி வெட்டினார். அதற்குள் ஆம்புலன்ஸ் வர உடனே மருத்துவமனைக்குச் சென்றோம். எல்லாமே ஒரு சாகசம் போல் நடந்தது.. 35 நிமிடங்களில் எல்லாம் நடந்து முடிந்தது. இதோ இன்று எங்கள் குழந்தை ரீகன் ஜீன் வேடல் உலகிற்கு வந்துவிட்டார்"
இவ்வாறாக எமிலி வேடல் விவரித்துள்ளார்.
வெளிநாடுகளில் பெரும்பாலும் மனைவியின் பிரசவத்தின் போது கணவன் கூட இருக்க அனுமதிக்கப்படுகிறது. இப்போது இந்தியாவிலும் அந்தப் போக்கு அதிகரித்து வருகிறது.
வீட்டில் நடந்த பிரசவங்கள்:
கருத்தரிப்புகாலம் முழுமைக்கும் கருப்பையினுள் குழந்தை வளர்ச்சிக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டிருந்த நஞ்சுக்கொடி அல்லது சினைக்கொடி என அழைக்கப்படும் சூல்வித்தகமும் (placenta), இந்த குழந்தை பிறப்பின்போது, குழந்தையுடன் சேர்த்து வெளியேற்றப்படும்.
இயற்கையாக சாதாரண முறையில், பெண்ணின் யோனியூடாக குழந்தையானது வெளியேற முடியாத நிலை ஏற்படும்போது, வேறு கருவிகள் கொண்டு வெளியே இழுத்து எடுப்பதன் மூலமோ, அல்லது வயிற்றில் வெட்டு ஒன்றை ஏற்படுத்தி அறுவைச் சிகிச்சையின் மூலமோ குழந்தை செயற்கையாக பெண்ணின் கருப்பையிருந்து வெளியேற்றப்படுவதுமுண்டு. அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பு நிகழும் வீதம் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் சுட்டுகின்றன.
அமெரிக்காவில் 31.8%ம், கனடாவில் 22.5% ம் குழந்தை பிறப்பு அறுவைச் சிகிச்சை மூலமே நிகழ்வதாக அறியப்படுகிறது. தற்போது இந்த குழந்தை பிறப்பானது மருத்துவமனைகளிலேயே நிகழ்கின்றதாயினும், 20 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தில் வீட்டில் பெண்களின் உதவியுடன் இது நிகழ்ந்து வந்தது.