Puducherry Power shutdown: புதுச்சேரியில் இன்று 19.07.2025 லாஸ்பேட்டை மற்றும் சுற்றுவட்டார மின்பாதை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் (காலை 09:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை) அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முழுவதும் பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோருக்கு மின் விநியோகம் செய்யும் பணியை புதுவை மின் துறை செய்து வருகிறது. இந்த மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் மின்துறை சுழற்சிமுறையில் மாதாந்திர மின் பாதை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். அத்தகைய சமயங்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

Continues below advertisement

லாஸ்பேட்டை மின்பாதை பராமரிப்பு பணி:

மின்தடை பகுதிகள் : அன்னை நகர் , நாவற்குளம், குறிஞ்சி நகர் விரிவாக்கம், அன்னி பெசன்ட் நகர், மோதிலால் நேரு நகர், அகத்தியர் நகர், பொதிகை நகர், வாசன் நகர், செவாலியர் சீனிவாசன் நகர், லாசுபேட் அரசு ஊழியர் குடியிருப்பு, ராஜாஜி நகர், அவ்வை நகர் ஒரு பகுதி, உயர் மின் அழுத்தநுகர்வோர்கள் (பிப்மேட் அலுவலகம், ஏர்போர்ட், மதிய உணவு திட்டம்)மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Continues below advertisement